உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

பதிவுகளை மின்அஞ்சலில் பெற

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

தெரிந்ததும்... தெரியாததும்


மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? சிசிச்சை என்ன?

காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.
இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.
எது‬ மலச்சிக்கல்?
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்'.
அடிப்படைக்‬ காரணம்
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
அந்தக்‬ காரணங்கள் தூண்டும் காரணிகள்
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.
பொதுவாகவே வயது ஆகஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.
கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.
வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் ‘அலுமினியம்’, ‘கால்சியம்’ கலந்துள்ள ‘ஆன்டாசிட்’ மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், ‘ஓபியம்’ கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை. இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும்.
காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும். மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும்.
இளம் பெண்களுக்குப் பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு ‘இடியோபதிக்டிரான்சிட் கோலன்’ எனும் நோய் வரலாம். அப்போது அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.
வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.
எப்போது‬ கவனிக்க வேண்டும்?
மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்:
1. மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது.
2. மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.
3. குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.
4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.
5. மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.
6. உடல் எடை குறையும்போது.
7. காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.
8. மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால்.
9. வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால்.
10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால்.
சிசிச்சை‬ என்ன?
மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம்.
இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத அகுபங்சர் மருந்துவம் நல்ல பலனை தருகிறது..
மலச்சிக்கலுக்குச் சுயசிகிச்சை செய்ய வேண்டாம்.
குறிப்பாக, பேதி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அவை பாதிக்கும்.
பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல.
தவிர்ப்பது‬ எப்படி?
மலச்சிக்கலைத் தவிர்க்க, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.
நார்ச்சத்து‬ உதவும்!
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.
தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். பு
கைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது.
மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.

மஞ்சள் காமாலை நோய்

.
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது
இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.
பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.
• காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
• பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
• வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
• எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
• நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
• மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.
• புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
• நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

அக்குபங்ச்சர் மருத்துவம்              நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே தான் இருக்கிறது. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.
இயற்கைச் சக்திகள் இணைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். இரத்த ஓடுபாதைகள், அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள், தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் சிறந்த மருந்தில்லா மருத்துவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம்  பழமையான மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதற்கும் நம்மிடம் இருந்து மறைந்து போனதற்கும் முக்கியமான காரணம் தன்னையும் தன்பரம்பரையும் தவிர வேறுயாருக்கும்தெரியக்கூடாது என்று மறைத்து வைத்ததுதான். ஒவ்வொரு தாத்தாக்களும் தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை கொடுத்ததால்தான் காலப்போக்கில் மறைந்தது. இதனால் தான் நம் அறிய மருத்துவக் குறிப்புகள் ()றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள்,  எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.
அக்குபஞ்சர் மருத்தவம் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலபேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கல்களை இந்த அக்குபஞ்சர் முறையில் தங்களை குணப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாகக்கூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால் குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்!
நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.
நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில், ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படும்.
அக்குபங்சர் மருத்துவம் என்பது பழங்காலத்திலிருந்து சீனாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 5,000 வருடங்களுக்கு முன்பு "ஹூவாங்-டி" என்ற சீன மன்னரால் அக்குபஞ்ச்சர் முறையாக தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது என்றாலும் இந்த மருத்துவமுறை வெளியுலகிற்க்கு தெரியாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பின்பு அமெரிக்க அதிபர் நிக்ஸன் அவர்கள் சீனாவிற்கு சென்றபொழுது அவருக்கு அப்பெண்டிஸால் ஏற்பட்ட தொந்தரவு அக்குபங்சர் நிபுணரால் சில விநாடிகளில் சரி செய்யப்பட்டது. இதனால் எல்லா நாட்டு மக்களுக்கும் அக்குபங்சர் மீது ஆர்வத்தை உண்டு பண்ணியது. பிறகு வெளிநாட்டினர் சீனா சென்று மறைமுகமாக அக்குபங்சர் கற்று பிறகு அதன்மூலம் எல்லா நாடுகளுக்கும் பரவ செய்தனர். அக்குபங்சர் என்றால் நமது உடலிலுள்ள சக்தி ஒட்ட பாதையில் மெல்லிய ஊசி கொண்டு நோயை தீர்க்கும் சிகிச்சைக்கு அக்குபங்சர் என்று பெயர் ஆகோஸ் என்றால் ஊசி பஞ்சர் என்றால் குத்துதல்.
அக்குபங்சர் ஊசி என்பது மிக மெல்லிய ரோமத்தின் அளலிலானது. மேலும் இந்த ஊசியை உடம்பில் இலேசாக செருகினாலே போதும். எனவே வலி மிகமிக குறைவாகவே இருக்கும்.
மருந்தில்லாத இந்த ஊசி எப்படி நோயை நீக்கும் என்றால் நமது உடம்பில் முக்கியமான உறுப்புகளுக்கு தனித்தனியாக உயிர் சக்தி ஒட்டபாதை உள்ளது. இந்த பாதையில் ஏற்பட்ட சக்தி தடையினை நாடி மூலம் அறிந்து மூலம் பிரபஞ்ச சக்தியை சக்தி ஓட்டப்பாதையில் செலுத்தினால் எல்லா நோய்களும் நீங்கும். தற்போது சீனா உள்பட எல்லா நாடுகளிலும் அக்குபங்சர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த விதமான மருந்து, மாத்திரைகள் இல்லாமல் மெல்லிய ஊசிய கொண்டு உடலில் தோலின் மேற்புரம் உள்ள அக்குபங்சர் புள்ளிகளில் லேசாக செருகும்போது அனைத்து நோய்களும் நீங்குகிறது. நாடி பார்த்து மிக சரியான புள்ளியை தேர்ந்தெடுத்து ஊசிபோடும் போது மிக விரைவான பலனை தரும்.
எந்த பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறை 50 வருடங்களாக இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளது. சென்னை, மதுரையில் மட்டும் ஒருநாளைக்கு சுமார் 1,000 நோயாளிகள் அக்குபங்ச்சர் வைத்தியம் செய்து கொண்டு நோய் நீங்கி செல்கின்றனர்.