உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

செவ்வாய், 28 ஜூன், 2011

குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. 


ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்
நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.
உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அ
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.
மாரடைப்பு அபாயம்:
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.
ஆபத்தான நோய்:
டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:
இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
. குறட்டையை குறைக்க: அகுபங்சர் மற்றும் வர்ம சிகிச்சை மூலம் சில வாரங்களிலேயே குறைக்க முடியும்

நன்றி:-

திங்கள், 27 ஜூன், 2011

இலவங்கப் பட்டை - சில தகவல்கள்

இந்தியாவில், மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் பட்டை. சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்ற பட்டை மரம், வெப்ப மண்டல பசுமை மாறா மரமாகும்.

இது 10 -15 மீட்டர் உயரம்வரை வளரும். இது லாரேசியா என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. சின்னமோமம் வேறம்(Cinnamomum verum) மற்றும் சின்னமோமம் சைலானிகம் (cinnamomum zeylanicum) என்ற முக்கியமான இரு வகைகளும் இலங்கை, இந்தியா, ஜாவா, சுமத்திரா, போர்னியோ, மடகாஸ்கர், வியட்நாம், பிரேசில் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 250 வகை இலவங்க மரங்கள் காணப்படுகின்றன. இதில் மிக உயர்ந்த தரம் இலங்கையின் இலவங்கமே..! சீன பட்டை கொஞ்சம் தரம் தாழ்ந்தது, தடிமனானது. இலவங்கப் பட்டை மரம் ரொம்ப சுகவாசி. இதற்கு ரொம்ப வெப்பமோ அதிக குளிரோ ஆகவே ஆகாது. மிதமான வெப்பம், ஈரப் பதமான சீதோஷ்ணநிலை பட்டை மரம் வளமாக வளர அவசியம் தேவை.

பட்டை மரம்அறுவடை செய்யப்படாத நிலையில் இலவங்கமரத்தின் அடிமரம் 30 -60 செ.மீ அகலத்தில் இருக்கும்; மேல் பட்டை கனமாக சாம்பல் படர்ந்த நிறத்தில் இருக்கும்; கிளைகள் தாழவே தொங்கும். இலைகள் எதிரெதிரே காணப்படும். இலையின் துளிர் சிவந்த வண்ணத்தில் துளிர்க்கும். இலவங்கத்தின் மலர்களும் பச்சையாகவே இருக்கும். ஆனால் அற்புத மணத்தைக் கொண்டிருக்கும். பழம் கருப்பாக, 1.5 -2 செ.மீ நீளத்தில், நீள்வட்டமாக அமைந்திருக்கும். இலவங்கப் பட்டை இலவங்க மரத்தின் உள்பகுதி பட்டையிலிருந்தே பெறப்படுகிறது. நன்கு முதிர்ந்த மரத்தின் பட்டையை உரித்து வெயிலில் உலர வைப்பார்கள். பட்டை மெலிதாக சூரிய வெப்பத்தில் காயும்போதே சுருள் சுருளாக மெல்லிய குழல் போல சுருண்டுவிடும். இதனை 5 -10 செ.மீ நீளமுள்ள சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிவிடுவார்கள். இதுவே இலவங்கப் பட்டை/குச்சி எனப்படும். இதுவே விற்பனைக்கு வரும் லவங்கப் பட்டை..!

பட்டையை மென்பானங்களிலும், மருந்துப் பொருளிலும், அழகு சாதனப் பொருள்களிலும், ஏன் கழிப்பறைப் பொருள்களிலும் இதன் வாசனைக்காவே கலக்கின்றனர். உணவுப் பொருளில், மசாலாவின் நாயகன் இலவங்கப் பட்டைதான். குஜராத் மற்றும் வட மாநிலங்களில் காதி (Khadi) எனப்படும் தயிர் பானத்தில் பட்டையைக் கலப்பது மிகவும் பிரசித்தம். இலவங்கத்தை தேநீரிலும் கலப்பது உண்டு.

பட்டை உணவுப் பொருள்களை, பதப்படுத்தும் குணம் கொண்டது. பட்டையிலுள்ள பினால் (Phenol) என்னும் வேதிப்பொருள் உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. அதனால் இதனை முக்கியமாக மாமிசத்தைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர். மேலும் பட்டை, உணவுக்கு ரம்மியமான மணத்தையும் கொடுக்கின்றது. பட்டை பரவலாக, நறுமணத்திற்காக சின்ன துண்டுகளாக/ பொடியாகவே கலக்கப்படுகிறது. இனிப்பின் சுவையை அதிகரித்துக் காண்பிக்க, இலவங்கப்பட்டை, இனிப்பில் கலக்கப்படுகிறது. மதுவிலும், மருந்திலும், சோப் மற்றும் பல்லுக்குத் தயாரிக்கும் பசை மற்றும் மருந்து, தைலம் போன்றவற்றிலும் இலவங்கம் கலக்கப்படுகிறது. இது மிட்டாய், சூயிங்கம் மற்றும் உடலுக்குத் தெளிக்கும் வாசனை திரவியங்களிலும் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, கேக், ரொட்டி, பிஸ்கட், சாக்லேட் போன்ற பொருள்களிலும் பட்டை மணம் மற்றும் சுவைக்காக கலக்கப்படுகிறது.

இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்

இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம்/எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.



இதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.

லவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன.

ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும்.

அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.

பட்டையை நுகர்ந்து பார்ப்பதனால், மூளையின் ஆராய்ந்து அறியும் மனப்பாங்கையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது என ஓர் ஆய்வு சொல்கிறது. தொடர்ந்து பட்டை சாப்பிட்டால் அதுவே நல்ல குடும்ப கட்டுப்பாட்டு மருந்தாகும். இது இயற்கையான பிறப்புக் கட்டுப்பாட்டு பொருள். குழந்தை பிறந்து ஒரு மாதம ஆனபின்பு, தினம் இரவு ஒரு துண்டு பட்டை சாப்பிட்டால், அது அடுத்த குழந்தையின் பிறப்பை 15 -20 மாதம் தள்ளிப் போடுமாம்.

இது உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது.. முக்கியமாக தாய்மையுற்ற பெண்களின் எடையை..!

பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. பட்டையும் தேனும் கலந்து சாப்பிட்டால், இது தற்காப்புத் தன்மையை அதிகரிக்குமாம். ஆயுளைக் கூட்டுமாம். உடல் சோர்வை விரட்டுமாம்.

பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக் கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம்.

சிறு நீர் உபாதை, சிறு நீர்க் குழாயில் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.

பரு வந்தாலும், பட்டையை அரைத்துப் பூசினால் பரு போயேவிடும். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.

பட்டை பொடி+ தேன்+ சூடான ஆலிவ் எண்ணெய் கலந்து வழுக்கை விழுந்த தலையில் தடவி 15 நிமிடம் வைத்திருந்தால் முடி முளைக்கும் என சொல்லப்படுகிறது. (காரியம் நடக்காவிட்டால், என் மேல் கல் வீசாதீர்கள்).

கிட்டத்தட்ட ஆயுர்வேதம், சித்தா மற்றும் அலோபதி கூட லவங்கப்பட்டை பல நோய்களின் நிவாரணி என்று சொல்கின்றன.

100 கிராம் பட்டையில் உள்ள சத்துப்பொருள்கள்

முக்கியப் பொருள்கள் +-சத்து மதிப்பு-+தினத் தேவையின்%

ஆற்றல் 247 Kcal 12%

மாவுப் பொருள் 50.59 g 39%

புரதம் 3.99 g 7%

மொத்த கொழுப்பு 1.24 g 4.5%

கொலஸ்டிரால் 0 mg 0%

நார் சத்து 53.1 g 133%

வைட்டமின்கள்: போலேட் 6 mcg 1.5%

நியாசின் 1.332 mg 8%

பான்டோதனிக் அமிலம் 0.358 mg 7%

பைரிடாக்சின் 0.158 mg 12%

ரிபோபிளேவின் 0.041 mg 3%

தையாமின் 0.022 mg 2%

வைட்டமின் A 295 IU 10%

வைட்டமின் C 3.8 mg 6%

வைட்டமின் E 10.44 mcg 70%

வைட்டமின் K 31.2 mcg 26%

Electrolytesசோடியம் 10 mg <1%

பொட்டாசியம் 431 mg 9%

தாது உப்புக்கள் கால்சியம் 1002 mg 100%

தாமிரம் 0.339 mg 38%

இரும்பு 8.32 mg 104%

மக்னீசியம் 60 mg 15%

மாங்கனீஸ் 17.466 mg 759%

பாஸ்பரஸ் 64 mg 9%

துத்தநாகம் 1.83 mg 17%

பேரா.சோ.மோகனா

வெள்ளி, 24 ஜூன், 2011

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! – நாட்டு வைத்தியம்

யற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தா… நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்ல… வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.

உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமை… அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?!
கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டா… உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.
இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.
இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தா… குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டா… உடம்பு ஏத்துக்கும்.
பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்ப… மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.
மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தா… புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.
                                                                நன்றி:- அன்னமேரி பாட்டி
                                                                      நன்றி:- அ.வி

வியாழன், 23 ஜூன், 2011

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா…

கொய்யாக்  கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும்.  இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. இதன் கிளைகள்  வழுவழுவென்று காணப்படும்.  இலைகள் தடித்து காணப்படும்.  கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.
கொய்யா, முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும்.  மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது..
கொய்யாப்பழம் கோடைக்காலங்களில்தான் அபரிமிதமாக விளையும்.  தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
கொய்யாவில் பலவகைகள் உள்ளன.  இதன் பழங்கள் சிலவகை  தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.
தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒருசில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும்.  இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.
கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும்.  இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.
மருத்துவப் பயன்கள்
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம்.  அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும்.  மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று.  நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.  குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
வயிற்றுப்புண் ஆற
இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது.  இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்பட
உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும்.  இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.  இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய் படுத்தும்.  ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.
இரத்தச்சோகை மாற
இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது.  இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும்.   இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
இதயப் படபடப்பு நீங்க
ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும்.  உடலில் வியர்வை அதிகம் தோன்றும்.  இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம்.  இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது.  இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது.  குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும்.  பற்கள் பலமடையும்.  நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்
* சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
* நரம்புகளைப் பலப்படுத்தும்.  உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்க
அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.  தினமும் இரண்டு கொய்யாப்பழம்  உண்டு வந்தால்   அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
                                                 நன்றி:ஹெல்த் சாய்ஸ்

செவ்வாய், 21 ஜூன், 2011

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

திங்கள், 20 ஜூன், 2011

அழகே வா!… அருகே வா! ( மருத்துவம்)

அழகு எங்கிருக்கின்றதோ அங்கே இயற்கையாகவே செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட்டுவிடும். அழகு இறைவன் ஒருவருக்கு வழங்கும் சிபாரிசு கடிதம்.
இறைவன் ஒவ்வொரு மனிதனையும் மிக அழகாகவே படைத்திருக்கின்றான் (அல்குர்ஆன் 95:4). ஆனால் மனிதன் தான் அலட்சியத்தின் காரணமாக அந்த அழகை வீணடிக்கின்றான் அல்லது மேலும் அழகாக வேண்டும் என்ற பேராசையால் இரசாயான மருந்துகளாலும் தேவையில்லாத உணவு கட்டுபாடுகளாலும் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளாலும் அழிவை நோக்கி செல்கின்றான் அந்த திசைகளை தெளிபடுத்தவே இந்த தொடர் இன்ஷாஅல்லாஹ்.
கொழுப்பு உணவை மனிதன் எதிரியாகவே நினைக்க தொடங்கிவிட்டான். மனிதனின் தோல் அழகுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு உணவு அவசியமே. ஒருவரின் தோல் பளபளப்பாக சொரசொரப்பு இல்லாமல் இருக்கவேண்டுமெனில் அதற்கு கொழுப்பு உணவு அவசியமே. கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்ப்பதது நமக்கு நாமே கேட்டை தான் உண்டாக்கிகொள்ளவே.
கொழுப்பு உணவினால் இரத்த குழாய் அடைப்பு, இதய நோய்கள்,உடல் பருமன் ஏற்படுகின்றதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அதற்கு காரணம் கொழுப்பு அல்ல!.
யாருடைய மண்ணீரலும் (Spleen) வயிறும் (Stomach) சரியாக வேலை செய்கிறதோ அவர் சராசரியான கொழுப்பை சாப்பிடுவதால் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது மாறாக, அக்கொழுப்பு உணவால் நன்மை ஏற்பட்டு உடலும் வனப்பு அடையும்.
இதற்கு மாற்றமாக யாருடைய வயிறும் (Stomach) மண்ணீரலும் (Spleen) சரியாக இயங்க வில்லையோ அவர் மிக குறைவான கொழுப்புணவு சாப்பிட்டாலும் அதனால் அவருக்கு தீங்கே ஏற்படும் காரணம் வயிறும் மண்ணீரலும் ஒழுங்காக இயங்காத காரணத்தல் கொழுப்புணவு முறையாக பயன்படாமல் போகின்றது. இந்த காரணத்தால் தான் பயன்படாத கொழுப்பு நம் உடம்பில் பல தீங்குகளை உண்டாக்குகின்றது. வயிறும் மண்ணீரலும் சரியாக செயல்பட வைத்துவிட்டால் இந்த கொழுப்பின் தீங்குகளிலிருந்து நம்உடலை காப்பாற்றி நன்மைகளை பெற்று நலமாக வாழலாம். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் கொழுப்பு உணவு அவசியமே.
உணவு உண்ணும் முறைகளை பின்பற்றினால் அது நம் உடலில் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகபடுத்தும். காலை உணவு அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டும் அதுவும் காலை நேரம் 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும் அதுதான் வயிறு நன்றாக இயங்கும் நேரம் . காலையில் நாம் உண்ணும் உணவே அன்று முழுவதும் நம் உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
மதியம் உண்ணும் உணவு நடுநிலையாகவும் இரவு உணவு மிக மிக குறைவாக அல்லது சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி, என்பதனை இவ்விடத்தில் நினைவு கூர்வது நல்லது.
இரவு என்பது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வளிப்பதற்காக எல்லாம்வல்ல இறைவன் நமக்களித்த அருட்கொடை. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்தால் ஓய்வு எப்படி கிடைக்கும்? வயிறு பெருங்குடல், சிறுகுடல், பித்தப்பை என உறுப்புகள் அனதைதும் சாப்பிட்டவுடன் இயங்கும் போது உறங்கினால் அது ஓய்வாகுமா?.
உணவினை மிக நன்றாக மென்று நாக்கால் சுவைத்து சாப்பிடவேண்டும் அப்போதுதான் முறையான ஜீரணம் உண்டாகும் உணவின் பலனை உடல் பெறும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். சாப்பிடும் அளவு குறையும்.
உணவை மெல்லாமல் சுவைக்காமல் வேகமாக விழுங்கினால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது அதனால் அதிகம் சாப்பிட வேண்டிவரும். முறையாக ஜீரணமாகாது முறையாக ஜீரணமாக காரணத்தால் நல்ல உணவு உண்டும் அதன் சத்துக்களை பெற முடியாமல் போய்விடுகின்றது இது போன்ற முறையற்ற செயல்களால் வயிறு பாதிக்கப்பட்டு அதனால் உடல் தோற்றமும் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.
நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பசியே இல்லாத போதும் உணவை சாப்பிடாதீர்கள் அது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்ற வாதமே அறிவுக்கு முரண்பட்ட தவறான வாதமாகும்.
நேரத்திற்கு சாப்பிடாத காரணத்தினால் தான் அல்சர் வருகின்றது என்றால் இன்று இந்தியாவில் வாழும் பல கோடி ஏழைகளுக்கும் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? அல்சர் வருவதற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாததல்ல, வயிறும் சிறுநீர்பைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் குறைபாடே 99% காரணம் அதை விட்டு மாத்திரைகள் மருந்துகள் சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகாது மருந்துகள் தான் சரியாகும். கையில் உள்ள பணம் தான் காலியாகும். எனவே நேரத்திற்கு சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.
உடலின் வடிவமைப்பு அசிங்கமாக இருப்பதை குறைப்பதற்கு பலர் இரவு பகல் உடற்பயிற்சி செய்வதை பார்க்கின்றோம் அதே நேரத்தில் உடற்பயிற்சி எதுவும் செய்யாமலே சாதாரண வேலைகளை செய்துகொண்டே ஆரோக்கியமாகவும் கச்சிதமாகமான உடலேலடும் சிலர் இருப்பதற்கு காரணம் என்ன?
உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக சீராகயிருந்தால் இயங்கினால் உடல் கட்டமைப்பும் தோற்றமும் அழகாக இருக்கம்.
இடுப்பும் புட்டமும் (Buttock) சேரும் இடத்தில் அதிக சதை போட்டால் அவரது பெருங்குடல் பிரச்சனையில் இருக்கின்றது என்று அர்த்தம்.
புட்டப்பகுதியிலும் தொடையின் பின் பகுதியிலும் கழுத்தின் பின் பகுதியிலும் யாருக்கு எல்லாம் சதை உண்டாகின்றதோ அவருக்கு சிறுநீர்பையில் (Urinary Bladder) பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் தொடையும் தொடையும் உரசிக்கொள்ளும்.
அக்குள் மடிப்புகளில் மார்பு பக்கவாட்டில் சிலருக்கு சதை உண்டாகி கைவீசி நடக்கவே மிகவும் சிரமபடுவார்கள் இவர்களுக்கு சிறுகுடல் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
உடம்பில் அளவுக்கதிகமாக எங்கு சதை ஏற்பட்டாலும் அது நோயின் அறிகுறியே உடல் உறுப்பு ஏதோ ஒன்றால் ஏற்படும் இயக்க குறைவே இதற்கு காரணம் அதை சரி செய்து விட்டால் அந்த சதை பகுதி சரியாகி உடல் வடிவமைப்பு சரியாகிவிடும்.
முகத்தின் அழகு தோற்றம் தான் ஒருவரை பற்றிய முதல் நல் அபிப்பிராயத்யத்தை வரவழைக்கும் முகத்தின் தோற்றத்திறகும் உடல் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டால் 6 வாரத்தில் ஆழகாக்குகின்றேன் என்று சொல்லும் இரசாயன முககீரீம்கலிருந்தும், பவுடர்களிலிருந்தும் இது போன்ற மற்ற பொருள்களிலிருந்தும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.
சிலருக்கு உடம்பு வெள்ளையாக இருக்கும் முகம் மட்டும் கருத்து கொண்டே பொகும். இவர் எத்தனை கிரீம் போட்டு தேய்த்தாலும் கிர்pம்தான் தீர்ந்து போகும் ஒழிய முகத்தின் கருப்பு மாறாது காரணம் யார் ஒருவருக்கு முகம் மட்டும் கருத்துக் கொண்டே போகின்றதோ அவருக்கு சிறுநீரகம் கிட்னி (kidney) சரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சிறுநீரக பலகீனத்தின் பிரதிபலிப்புதான் முகம் கருத்துபோவது. இதுமட்டுல்ல முகத்தில் வீக்கம், தசைகள் சுருங்கல் கழுத்தின் முன்பக்கம் சதை உண்டாகுதல், நாக்கு உலர்ந்து போவது இவையெல்லாம் சிறுநீரகத்தின் சக்தி குறைபட்டால் உருவாவதே.
புருவம் இமைகளில் உள்ள முடி யாருக்கொல்லாம் கொட்டுகின்றதோ அவருக்கு நுரையீரல்களின் இயக்கம் சரியில்லை அதை சரிசெய்யும் போது இவை சரியாகும். உடம்பில் உள்ள முடி கொட்டுவது (தாடி, மீசை, புருவம், இமை, பிறப்புறுப்புகள்) நுரையீரல் சம்பந்தப்பட்டது தலையில் உள்ள முடி கொட்டுவது கிட்னி சம்பந்தப்பட்டது.
கண்களில் கீழ் இமை சிலருக்கு சிறு பை போல் தொங்கும் அல்லது துடித்துக்கொண்டே இருக்கும் வயிறு சக்தியின் குறைபாடே இது.
உதடு அழகாயிருக்க ஆயிரக்கணக்கில் மேக்கப் உபகரணங்கள், ஆரோக்கிய உடலுக்கு அது தேவையில்லை. உதடு பெருத்து தொங்கினால் உங்களுடைய மண்ணீரலும் வயிறும் தான் காரணம் உதடு வரண்டு போனால் அதற்கு பெருங்குடலே காரணம். இந்த உறுப்புகள் சரியாக இயங்கினால் உதடு இயற்கையாகவே அழகாக அமைந்துவிடும்.
முகம் கருத்து போவது சிறுநீரக பலகீனத்தால் ஏற்படுவது போல் சிலருக்கு முகம் நீல கலராக மாறும் இதற்கு காரணம் கல்லீரலே அதே போல முகம் வெளுத்தல் போன்று தோன்றினாலும் அதற்கும் காரணம் கல்லீரலே இந்த உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்தால் இவைகள் சரியாகிவிடும்.
முகத்தில் கன்னம் மட்டும் உப்பியிருந்தால் சிறுகுடலை கவனிக்கவேண்டும் முகம் முழுவதும் உப்பியிருந்தல் வயிறு பெருங்குடலை சரிசெய்ய வேண்டும்.
கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரிசெய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்யவேண்டும்.
முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்மந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல்
சிலரின் கை கால் நகங்கள் உடைந்தும் முறிந்தும் உழுங்கில்லாத அமைப்பிலும் சொத்தை போன்றும் கலர் மாறியும் இருக்கும் இதற்கு காரணம் பித்தபை (Gallbladder) கல்லீரலும் (Liver) சரியாக இயங்க வில்லை என்பதை அறிந்து அவற்றை சரிசெய்தால் இவை சரியாகிவிடும்.
முகத்தின் அழகும் உடலின் அழகு தோற்றமும் நம் மனதில் நல் அபிப்பிராயத்தை உருவாக்கும் அதே நேரத்தில் சிலரிடம் நாம் நெருங்கி பேச முற்படும்போது நம்மை தூர விலகி நிற்க வைக்கும அவர் மீது
வீசும் வாசம்.
பூவுக்கு மட்டும்தான் வாசமுண்டா?
வேருக்கும் உண்டு!
வேருக்கு மட்டும்தான் வாசம் உண்டா?
ஓவ்வொரு மனிதனுக்கும் உண்டு!
மனிதனின் உடலில் வீசும் வாசத்தை வைத்தே அவனுடைய பாதிக்கப்பட்ட உறுப்பை கனித்துவிடலாம் அதனால் ஏற்படும் நோய்களையும் சரிசெய்துவிடலாம்.
யாருடைய உடலில் அழுகல் (Putrid) வாசம் வீசுகின்றதோ அவருடைய சிறுநீரகமும் சிறுநீர்பையும் சரியாக இல்லை அதனை நாம் சரிவர இயங்கவைத்துவிட்டால் அந்த வாசம் வீசுவது நின்றுவிடும்.
யாருடைய உடம்பில் மாமிசவாசம் (Fleshy) வீசுகின்றதோ அவருடைய நுரையீரல், பெருங்குடல்
பிரச்சனை என்பதை நாம் அறிந்துகொண்டு அந்த உறுப்புகளை நாம் சரிசெய்ய வேண்டும் அதன் மூலம்
இந்த வாசத்pலிருந்து விடபடலாம்.
தீய்ந்த (Scoreched) வாசம் யார் மீது வீசுகின்றதோ அவருடைய இதயம் மற்றும் (Triplewarmer) எனும் மூவெப்ப மண்டலத்தில் இயக்கம் சரியில்லை என்று அர்த்தம் அவற்றை அறிந்து இயக்கத்தை சரிசெய்வதன் மூலம் இந்த வாசத்திலிருந்து விடுபடலவாம்.
கல்லீரலும் பித்தபையும் சரியில்லை என்றால் அவருடைய உடம்பில் ஊசிபோன (Rancid) வாசம் வீசும் கல்லீரல் பித்தப்பை இயக்கத்தை சரிசெய்து இந்த வாசத்திலிருந்து விடுபடலாம்.
யாருடைய உடம்பில் சுகந்தமான (Fragrant) இனிமையான வாசம் வீசுகின்றதோ அருடைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் இயக்கம் சரியாக இருக்கிறது குறிப்பாக வயிறும் மண்ணீரலும் நன்றான இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பார்க்க அழகாக இருபார்கள் சிலர் ஆனால் வாய் திறந்து பேசினால் நம்மால் அருகில் நிற்க முடியாது அந்த அளவுக்கு வாசம் வீசும்.
பித்தப்பை சரியாக இயங்காவிட்டால் அவர்கள் நாக்கில் வெண்மை படியும் வாயும் வாசம் வீசும், இவர்கள் தினமும் காலையில் பல்துலக்கிவிட்டு நாக்கை டங்கிளீனர் (Tongue Cleaner) கொண்டு வழித்துக்கொண்டிருப்பார்கள்
. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிசெய்தாலும் இவர்களின் பிரச்சனை தீராது, இதனால் நாக்கின் சுவை உணர்வு மொட்டுக்கள் பாழடைந்து நாக்கின் சுவை உணரும் தன்மை இழந்து போகும். இதற்கு ஒரே வழி பித்தப்பையின் இயக்கத்தை சரிசெய்ய வேண்டும், வாய் வாசனை சரியாகும், வெண்மை படிதல் நிற்கும்.சிறுகுடல் பாதிக்கப்படின் வாயின் உட்பகுதியிலும் நாவிலும் புண்கள் ஏற்படும் இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், இதனை சரிசெய்ய சிறுகுடல் இயக்கத்தினை சரிசெய்தால் போதும்.
நாக்கு மிகவும் சிகப்பாக இருந்தால் உடன் நாம் இதயத்தை கவனிக்கவேண்டும். நாக்கு மஞ்சளாக இருந்தால் வயிற்று பகுதியில் பிரச்சனை என்று அறிந்து அவைகளை சரிசெய்ய வேண்டும். சில நேரங்களில் இவைகளாலும் வாய் வாசனை ஏற்படுவதுண்டு.
குளிக்காமல் பல் துலக்காமல் இருந்து வீசும் வாசத்திற்கு உடல் உறுப்புகள் பொருப்பல்ல அவைகள் அப்பாவிகள் தினமும் குளித்து வாசனை திரவியங்கள் பூசாமல் வீசும் இயற்கையான வாசத்திற்கே உடல் உறுப்புகள் பொறுப்பாகும்.
உடல் உறுப்புகளின் இயக்கத்தினை நாம் சரியாக வைத்துக்கொண்டால் உடல் அழகைப்பற்றி நாம் கவலைபட தேவையில்லை. அழகே வா அருகே வா என்று அழைக்க வேண்டிய அவசியமுமில்லை அவை நம்முடனே தங்கி கொள்ளும் நம்முடைய தோற்றம் சொல், செயல் அனைத்தும் அழகாவே அமையும் இன்ஷாஅல்லாஹ்.
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசம்) குழப்பமும் தோன்றின தீமைகளிலிருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகில்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கின்றான் (அல்குர்ஆன் 30:41).
இயற்கையான அழகை பெற்று வாழ முயற்சிப்போம். இரசாயண பொருட்களின் தீங்குகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம், அதற்காக பிராத்திப்போம்…

                                                                               நன்றி:-Dr. A. ஷேக் அலாவுதீன்

ஞாயிறு, 19 ஜூன், 2011

சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:
* உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

*  வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.


* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

                                                                             -----உஸ்மான்------

சனி, 18 ஜூன், 2011

பசலைக்கீரை மகத்துவம்

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு  வேறு இல்லை
எனலாம் . இந்த கீரையில் வைட்டமின்   A, B C  சத்துகள் உள்ளது .
சுண்ணாம்பு  சத்து  நார் சத்து  இரும்பு சத்து அடங்கியது .
குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி. கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது
சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள்
வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.
மருத்துவக் குணங்கள்:
இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
இது தாதுவை கெட்டிப்படுத்தும் .
மூளைக்கு சக்தி கொடுக்கும் .
உடல் வரட்ச்சியை அகற்றும் .
உள சூட்டை போக்கும்
மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன
பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக
உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின்
செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம்
சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும்
பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக
இருக்கவும் பயன்படுகிறது.
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.
இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர  டோனிக் !அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.
சமைப்பது: கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு
காற்றோட்டமாக சிறிதுநேரம் வைத்தால் உள்ஈரம் போய்விடும். அலசும் போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே போதுமானது; கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். குறைந்த நேரமே வேகவைக்கவும்.
உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு
நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28
மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560
மி.கிராம்.
சில சமையல் வகைகள்: இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் தக்காளி சேர்த்து கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.
நன்றி:- nidur.info
நன்றி:- tamilkudumbam.com

கொலஸ்ட்ரால் Cholestrol [கொழுப்புசத்து]

“உணவே மருந்து, மருந்தே உணவு’. உண்ணும் உணவு சீராக அமைந்தால், அந்த உணவே நோயைப் போக்கும் மருந்தாகவும் அமையும். உயிரை வளர்க்கும் உணவுதான், அளவுக்கு மீறினால் நம் உயிரையும் பறிக்கின்றது.
 


நம் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகள் -& Macro Nutrients
2. கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் & Micro Nutritients்
கண்களுக்கும் புலனாகும் உணவு வகைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை
1. மாவுச்சத்து (Carbohydrates)
2. புரதச் சத்து (Proteins)
3. கொழுப்புச் சத்து (Fat)

கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் இரண்டு வகைப்படும்.
1. வைட்டமின்கள் (Vitamins)
2. தாதுப் பொருட்கள் (Minerals)
கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகளின் ஒன்றான கொழுப்புசத்து பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த கொழுப்புச் சத்து மூன்று வகைப்படும்.
1. பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid -SFA)
2. அபூரிதக் கொழுப்பு
(Unsaturated fatty acid -UFA)
3. டிரான்ஸ் கொழுப்பு (Trans fatty acid -TFA)

இந்த கொழுப்புச் சத்துக்கள் ரத்தத்தில் மிருதுவாகவும், மெழுகுத் தன்மையுடனும் நகர்ந்து கொண்டிருக்கக்கூடியது. சீரான கொழுப்பின் அளவு, நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. இவை மிகவும் சக்தி வாய்ந்த எரிபொருளாகவும் செயல் படுகிறது.
நம் உடலுக்குத் தேவையான மொத்த சக்தியில் 25% மட்டுமே கொழுப்பு உணவிலிருந்து கிடைக்க வேண்டும். மீதமுள்ள 75% ல் 60% மாவு உணவிலிருந்தும், 15% புரத உணவிலிருந்தும் பெறப்பட வேண்டும்.
ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு 2000 kcal. இதில்  500 kcal மட்டுமே கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கலாம். 1 கிராம் கொழுப்பு உணவு 9 kcalசக்தியைத் தருகிறது. அப்படியென்றால், 50 கிராம் கொழுப்பு உணவு நமக்கு கிட்டத்தட்ட 500 kcal சக்தியைக் கொடுக்கும். இந்த 50 கிராம் கொழுப்பு உணவை மட்டுமே ஒரு நாளைக்கு ஒருவர் சாப்பிடலாம். ஆனால் நோயாளிகள் குறைத்து சாப்பிட வேண்டும். இதய நோயாளிகள் 5% மட்டுமே கொழுப்பு உணவு சாப்பிடலாம்.

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஏஈஃ என்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர். ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
Total Cholesterol <—>200 mgm%

மொத்த கொலஸ்ட்டிரால்
LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்
HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 ட்ஞ்ட்% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு எனப்படும் குtணூணிடுஞு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் கூஎஃ ன் அளவு
150 mgm்% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35ட்ஞ்ட்% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 ட்ஞ்ட்% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்
பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)
எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து
100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
ஒமேகா 6 உள்ள உணவுகள்
சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.

ஆராய்ச்சி முடிவுகள்

Dr.ஜான் சபேத் (Dr. Jhon Sabata) என்பவர் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகம் (Lomo Linda University) மூலமாக செய்த ஆராய்ச்சியில், பாதாம், பிஸ்தா, வேர்கடலை போன்ற உணவு வகைகளை தினமும் 2.3 அவுன்ஸ் (65 கிராம்) உண்பதால் 5.1% மொத்த கொலஸ்ட்ரால் அளவிலும், 7.4 ஃஈஃ கொலஸ்ட்ரால் அளவிலும் குறைகிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.

எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்.
· சீரான உடற்பயிற்சி
· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
· மது அருந்துவதைத் தவிர்ப்பது
· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
· யோகாசன பயிற்சி செய்வது,
· தியானப் பயிற்சி செய்வது .

கொலஸ்ட்ரால்


இதய நலம் தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்தக் கொலஸ்ட்ரால் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.
கொலஸ்ட்ரால் என்ற வார்த்தை இன்றைக்கு ஆரோக்கியம் தொடர்பான விவாதங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கொலஸ்ட்ரால் பற்றிய உண்மைகளைவிட வதந்திகளே அதிக அளவு பரவியுள்ளன. கொலஸ்ட்ராலை குறிப்பிட்ட அளவில் சேர்த்துக்கொள்வது உடலுக்குப் பல வகைகளில் நன்மையாக அமையும்.
ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் சேர்க்கப்படும்போதுதான உடல் நலத்துக்குக் கேடாக அமைந்துவிடுகிறது. கதாநாயகனாகச் செயல்பட்டு நன்மை புரியும் கொலஸ்ட்ராலானது அளவுக்கு அதிகமான நிலையில் கொடூரமான வில்லனாக மாறி பல தீமைகளை விளைவித்திவிடுகிறது.

சரி, கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும் உடலின் சில முக்கியதான பணிகளைச் செய்யவும் நமது உடலே குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து கொள்கிறது.
கொலஸ்ட்ரால் (CHOLESTEROL) என்பது கோலி (STEROL) என்ற இரண்டு கிரேக்கச் சொற்கள் சேர்ந்து உருவான ஒரு வார்த்தை. கோலி என்ற கிரேக்கச் சொல்லுக்கு பித்த நீர் என்று பொருள். ஸ்ட்ரால் என்ற சொல்லுக்குக் கெட்டியான பொருள் என்று அர்த்தம். கல்லீரலானது இந்தப் பொருளை உருவாக்குவதால் இதற்கு இப்படி ஒரு பெயர் வழங்கப்பட்டது.
அளவோடு இருந்தால் கொலஸ்ட்ரால் ஒரு கதாநாயகன் என்று சொன்னேன் இல்லையா, அது ஒன்றும் மிகை அல்ல. கொலஸ்ட்ரால் நம் உடலுக்குப் பல நன்மைகள் உண்டு. கொலஸட்ராலானது ஆண் இன ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரானையும் (TESTOSTERONE) பெண் இன ஹார்மோனாகிய ஈஸ்ட்ரோஜனையும் உற்பத்தி செய்ய துணைபுரிகிறது.
செல்களில் மென் திசுக்களை உருவாக்க மற்ற கொழுப்புகளுடன் கொலஸ்ட்ராலும் இணைந்து செயல்படுகிறது. மேலும் மூளை, நரம்பு அமைப்புகள் உருவாகத் துணைபுரிகிறது. முக்கிய உயிர்ச்சத்தான வைட்டமின் டி&யின் (VITAMIN D) உற்பத்தியைத் தூண்டுகிறது.
இவ்வளவு நல்லவனாக இருக்கும் கொலஸ்ட்ரால் ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் எந்த அளவு இருக்க வேண்டும் என்பது நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
உடலில் உள்ள 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லிகிராம் முதல் 200 மில்லிகிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் உடல் நலம் சீர்குலைகிறது. 75 கிலோ உள்ள ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் 5 அவுன்ஸ் அல்லது 75 முதல் 150 கிராம் அளவுள்ள கொலஸ்ட்ரால் இருக்கும். மனித மூளையின் மொத்த எடையில் 3 சதவீதம் கொலஸ்ட்ரால்தான். தோல், கல்லீரல் ஆகியவற்றின் மொத்த எடையில் 0.3 சதவீதம் கொலஸ்ட்ரால் உள்ளது.
சிறுநீரக மேல் சுரப்பிகள், சினைப்பைகள், விதைப்பைகள் போன்ற உறுப்புகளில் கொலஸ்ட்ராலானது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உடலில் உள்ள மொத்த அளவு கொலஸ்ட்ராலில் 20 சதவீதம் ரத்தத்தில் இருக்கிறது.
கொலஸ்ட்ராலை அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதம் (Low Density Lipo Protein) என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தைத் தீமை தரும் கொலஸ்ட்ரால் என்றும், அடர்த்தி மிகுந்த கொழுப்புப் புரதத்தை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்றும் பிரித்துள்ளனர்.
நன்மை தரும் கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களில் படியும் தீமை தரும் கொலஸ்ட்ராலை அகற்றி அவற்றை ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று அழிக்கின்றன. இவ்வாறு ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்புப் படிவங்களை அகற்றி, ரத்தக் குழாய்களில் ரத்தமானது தடையில்லாமல் ஓட துணை புரிவதால் அதாவது ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பான பணியைச் செய்வதால் இவற்றை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்கிறார்கள். ரத்தத்தில் இவ்வகையான கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதயத்துக்கு மிகவும் நல்லது.
இதற்கு மாறாக ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதிகமாவதால் இதயத்துக்குப் பல்வேறு கேடுகள் ஏற்படுகின்றன.
கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளைத் தேவைக்கு அதிகமாக தொடர்ந்து அதிக அளவு உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமாகிறது. இதன் காரணமாக அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தின் படிவங்கள் காலப்போக்கில் ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளின் சுவர்களிர் கொஞ்சம் கொஞ்சமாகப் படிகின்றன. இவற்றை உரிய காலத்தில் தடுக்கவில்லை என்றால் இதயத் தமனிகளின் உள்விட்டம் குறுகிக்கொண்டே வரும். மேலும் இதயத் தமனிகளின் சுருங்கி விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு தடித்துவிடும்.
இதயத் தமனிகளின் உள்விட்டமானது இப்படிப் பல்வகைகளில் குறுகுவதால் இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. சில சமயங்களில் இதயம் தமனிகள் முழுமையாகத் தடைபடுவதால் இதயத் தசைகள் அவை இயங்குவதற்குத் தேவையான ரத்தத்தைப் பெற முடியாமல் மடிந்துவிடுகின்றன. இறுதியில் மாரடைப்பால் (Heart Attack) பாதிக்கப்படும் நிலைக்கு நோயாளி தள்ளப்படுகிறார்.
எனவே நம் உடலில் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேர்வதை நாம் தடுக்  வேண்டும். எ,ந்தெந்த பொருள்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொண்டால் எதைத் தவிர்க்கலாம் என்பதம் புரிந்துவிடும்.
பொதுவாக டவிலங்கினங்களிடம் இருந்து கிடைக்கும் உணவு வகைகளிலும் பால், பால் பொருள்கள் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது. 30 கிராம் எடை உள்ள ஆட்டு மூளையில் 1600 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இதே எடையுள்ள கல்லீரலில் சுமார் 410 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 30 மில்லி கிராம் எடையுள்ள ஆட்டு சிறுநீரகத்தில் சுமார் 330 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. வெண்ணெய் அகற்றப்பட்£த ஒரு கப் பாலில் சுமார் 35 மில்லிகிராம் கொலஸ்ட்ராலும், வெண்ணெய் அகற்றப்படாத ஒரு கப் தயிரில் சுமார் 35 கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.
காய்கறி வகைகள், கனிகள், பலவகையான தானிய வகைகளில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவான அளவில் உள்ளது. வெண்ணெய் நீக்கப்பட்ட ஒரு கப் மோரில், 9 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேராதபடி உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொண்டால் இதயத்தைப் பாதுகாக்கலாம். இன்னொரு வழிமுறையையும் நீங்கள் பின்பற்றலாம்.
20 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தங்களுடைய உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால் இதயத்தைப் பாதுகாக்கலாம். இன்னொரு வழிமுறையையும் நீங்கள் பின்பற்றலாம்.
20 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, தங்களுடைய உணவு முறையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்த தற்பாதுகாப்பு முறை. ஒவ்வொருவரும் தங்களுடைய ரதத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்து 150 மில்லி கிராம் அளவுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்த பாதுகாப்பு முறை எனலாம்.
கொலஸ்ட்ரால் நமது இதய நலனைப் பாதிக்காதவாறு நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் என்ன?
உடலின் எடையை சீரான அளவில் வைத்துச் சேர்த்து கொள்ளுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்-.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்ச செய்யுங்கள்.
தினசரி உணவில் கொழுப்புச் சத்துகள் மிகுந்த உணவு வகைகளான வெண்ணெய், ஆட்டு இறைச்சி, கொழுப்பு அகற்றப்படாத பால், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை உங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நன்றி:- Karaikal S.M. Arif Maricar Online
நன்றி:- தமிழ்த் தேனீ

வெள்ளி, 17 ஜூன், 2011

அகுபங்சரில் உறுப்பின் சக்தி ஓட்ட பாதை ACUPUNCTURE

                 கல்லீரல் (LIVER)



               இங்கு  கால் விரல்கள் மூலம் எந்தெந்த உறுப்பின் பாதிப்பு நிலைகளை அறியலாம் என்பதை பார்ப்போம், .மண்ணீரல் (SPLEEN) கல்லீரல் (LIVER), வயிறு (STOMACH), பித்தப்பை (GALL BLADER), சிறுநீர்பை (URINARY BLADER), சிறுநீரகம் (KIDNEY). இந்த உறுப்புக்கள் அனைத்தின் சக்தி பாதைகளும் கால் வழியே செல்கின்றன. இந்த உறுப்புக்கள் அனைத்ததும் ஆரோக்கியமாக இருந்தால் நமது கால்களும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், நாமும் கவிதை பாடும் கால்களுக்கு சொந்தக் காரர்களாக இருப்போம்.

                                                  மண்ணீரல் (SPLEEN)

  கால் பெரு விரலின் நகத்தின் வெளிப் பக்க ஓரத்தில் ஆரம்பித்து உள்ளங் கால் வெள்ளை நிறமும் புறங்கால் (பாதத்தின் மேல் பகுதி) நிறமும் சேரும் பாதை வழியாக கனுக்கால் பக்கமாக மேல்நோக்கி தொப்புளிலிருந்து 4 இன்ச் தூரத்தில் செல்லும் இந்த சக்தி பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் மண்ணீரல் சம்பந்தப்பட்டவை.

கால் பெருவிரல் நகத்தின் மேல் பகுதியின் தோலும் நகமும் சேரும் மையப் பகுதியில் ஆரம்பித்து காலில் உள் பக்க ஓரமாக, முழங்கால் ஓரமாக சென்று மார்பு காம்புக்கு கீழே முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் எல்லாம் கல்லீரல் சார்ந்தவையாகும்.

              வயிறு (STOMACH)

கால் பெருவிரலுக்கு பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடையும் இந்த சக்தி ஓட்ட பாதை காலில் புறங்கால் பக்கமாக கால் எலும்பை ஒட்டி முழங்கால் வெளிப்பக்க வழியாக செல்கின்றது. கண் கீழ் இமை மைய பகுதியில் ஆரம்பிக்கின்றது இந்த சக்தி ஓட்டம். இந்த பாதை செல்லும் பகுதியில் ஏற்படும் அனைத்து நோயின் அறிகுறிகளும் வயிறு சம்பந்தப்பட்டவைகளாக இருக்கும். அதிகமானோர் இந்த சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர்.

பித்தப்பை (Gall Bladder)

கண்ணின் ஓரத்தில் ஆரம்பிக்கும் இந்த சக்தி ஓட்ட பாதை தலையில் சைடில் ஒரு வட்டமடித்து வயிற்று பகுதி வழியாக கீழிறங்கி வெளிப்பக்க தொடை மைய பகுதி வழியாக முழங்கால் வெளிப்பக்க ஓரமாக வந்து பிறகு கால் வெளிப்பக்க மைய பகுதி வழியாக சென்று கால் சுன்டு விரல் பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடைகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த பித்தப்பை சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் தடங்களே காரனமாகும். ஒற்றை தலைவலிக்கு கதாநாயகனே இந்த சக்தி ஓட்ட பாதை தான்.மசாலா பொருட்களை அதிகம் சாப்பிட்டால் இந்த பாதையில் அதிகம் பாதிப்பு ஏற்படும். இரவு 11 மணிக்கு தூங்காமல் விழித்திருந்தாலும் இந்த பாதையில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

சிறுநீர் பை (URINARY BLADER)

“நீர் இன்றி அமையாது உலகு”
“சிறுநீர் பை சக்தியின்றி ஆரோக்கியமாகாது உடம்பு”
ஆம்,உடல் முழுவதும் பரவியிருக்கும் ஒரு மாபெரும் சக்தி ஓட்ட பாதை. ஏகப்பட்ட புள்ளிகளை தன்னகத்தே கொண்டு அழகாக ஆட்சி செய்யும் சக்தி ஓட்ட பாதை கண்ணின் ஓரமும் மூக்கின் ஓரமும் சந்திக்கும் இடத்தில் ஆரம்பித்து முதுகு பகுதியில் பரவி கால் கீழ் பகுதி வழியாக சென்று சுன்டு விரல் ஓரத்தில் முடிவடைகின்றது.கால் பின்பக்க பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் முழங்கால், முழங்கால் கீழ் ஏற்படும் பிரச்சினைகளும் தொடை பின்பக்கம் ஏற்படும் பிரச்சினைகளும் இந்த சக்தி ஓட்ட பாதையைச் சார்ந்தது. BACK PAIN இடுப்பு வழியின் துயரத்தை துடைத்து எறியும் ஓர் அற்புத பாதை. உடம்பில் எங்கெல்லாம் சூடு, எரிச்சல் ஏற்படுகின்றதோ உடனே நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு முடிவு செய்துக் கொள்ளலாம் அது சிறுநீர் பைக்கும் அது சம்பந்தப்பட்ட உறுப்புக்கும் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கு தொடர்பு இல்லை என்று.
கண் எரிச்சல், தலையில் சூடு, வயிற்று எரிச்சல் (மற்றவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து வரும் வயிற்று எரிச்சலுக்கு சிறுநீர் பை காரணமாகாது), பாதத்தில் சூடு இன்னும் எங்கெல்லாம் உடம்பில் வெப்பம் எரிச்சல் உண்டாகின்றதோ அதற்கெல்லாம் காரணம் இந்த சிறுநீர் பைதான்.

                         சிறுநீரகம் (KIDNEY)

கால் பெரு விரல் எலும்பும் பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் உள்ளங்கால் பகுதியில் சிறுபள்ளமான இடத்தில் ஆரம்பிக்கின்றது இந்த சிறுநீரகத்தின் சக்தி ஓட்டம். பிறகு கனுக்காலுக்கு சற்று முன்பாக பெரு விரல் பக்கம் மேலேறி கனுக்கால் முழிக்கும் வெளிப் பக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதி வழியாக மேலேறி கால் உள் பக்கமாக சென்று தொப்புளை ஒட்டி மேல் நோக்கி போய் நெஞ்சு பகுதியில் முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவையாகும். அதிவேகமாக சாப்பிடும் அனைவரும் சிறுநீரகத்துக்கு ஆபத்தையே உருவாக்குகின்றார்கள். எந்த அளவிற்கு வேகமாக சாப்பிடுகின்றீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்கின்றீர்கள் (பார்க்க: விட்டமின் மாத்திரையின் மறுபக்கம் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுரைகள்).கால் வலி என்றால் நாம் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் இத்தனை இருக்க (மண்ணீரல், கல்லீரல், வயிறு, பித்த பை, சிறுநீர் பை மற்றும் சிறுநீரகம்) இவை அனைத்தையும் விட்டு விட்டு இவைகளில் எந்த உறுப்பு பாதிப்படைந்தால் இந்த கால் வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, பாதத்தில் வலி இன்னும் பிற வலிகள் வந்திருக்கின்றது என்பதை கண்டறிந்து சரி செய்யாமல் மருந்துகள் வாங்கி சாப்பிடுவது, மசாஜ் கிரீம் வாங்கி தேய்ப்பது, வலி நிவாரனி எண்ணெய் வாங்கி தேய்ப்பது என்பது நோயை தீர்க்காது. தற்காலிக சுகத்தை வேண்டுமானால் தரலாம். தேய்த்துவிடுபவர் எதிர்மறையாக இருந்தால் சுகம் கொஞ்சம் கூடலாம்.
மற்றபடி நோய் தீராது. அது உள் நோக்கி வளர்ந்துக் கொண்டே இருக்கும். கால் முட்டியில் பிரச்சினை என்றால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரி செய்து விட்டால் கால் முட்டியின் பிரச்சினை நிரந்தரமாக சரியாகும். அதை விட்டு விட்டு கால் முட்டியை மாற்றச் சொல்வது, நோயை விட்டு விட்டு நோயால் ஏற்பட்ட விளைவை மட்டும் சரி செய்வதாகும். நோயின் மூலத்தை சரி செய்யாமல் நோயின் விளைவை சரி செய்துவிட்டு நோய் குணமாகிவிட்டது என்று கூறும் உலக மகா அறிவாளிகள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
வயதான நபருக்கு முட்டியை மாற்றுகின்றீர்கள் வளரும் ஒரு 8 வயது சிறுவன் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முழங்கால் முட்டியில் பிரச்சினை என்றால் என்ன செய்வீர்கள். அவன் வளர வளர 6 மாதத்திற்கு ஒரு முறை முட்டியை மாற்ற முடியுமா?

அகுபங்சர் ஊசிகளை உடலில் செலுத்தும் முறைகள்.






மனித உடலில் செல்கள் வீடியோ காட்சிகள்.


வியாழன், 16 ஜூன், 2011

ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? டாக்டர்.புரூஸ் லிப்டனின் உரைகள் - வீடியோ


செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர்.டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார்.
”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி - 1

”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி-2

”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி-3


”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி-4

”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி-5

”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி-6

”உணர்வுகளின் உயிரியல்”  பகுதி-7

மனித உடலின் ஜீரண முறைகள். வீடியோ காட்சிகள்.