உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வியாழன், 29 மே, 2014

மக்கள் நலமுடன் வாழ மகத்தான சிகிச்சை அகுபங்சர் சிகிச்சை

இன்று உலகில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும், பெரிதும் வரவேற்பை பெற்றுவரும் சீன மருத்துவத்தின் ஜீவநாடியான அகுபங்சர் சிகிச்சை 8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓரு பாரம்பரியம் மிக்க வைத்திய முறை. இன்று  நோயால் இறப்பவர்களைவிட மருந்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அது மட்டும் அல்ல , சம்பாதிக்கும் பணத்தை மருத்துவத்திற்கென்றே பெருமளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும் காலமெல்லாம் மருந்து மாத்திரைகள் என மயானம் வரை தொடரும் அவல நிலை உள்ளது. இந்நிலை மாற உச்சிமுதல் உள்ளங்கால்வரை எப்பேர்ப்பட்ட நோய்களையும் முழுமையாக குணப்படுத்தும் ஆற்றல், படத்தவை அகுபங்சர்சிகிச்சை. மருந்துகள் இல்லாத மகத்தான சிகிச்சையாக இருப்பதால் பக்கவிளைவுகள் இல்லை. மேலும் பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
       இன்றைய நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத 96 வகையான நோய்களையும் அகுபங்சர் சிகிச்சையில் குணப்படுத்த முடியும் என உலகசுகாதார நிறுவனம் (WHO)  கூறுகிறது.. இன்னும் சொல்வதானால் உலக சுகாதார நிறுவனம் குறிக்கோளே மருந்தில்லா உலகம் படைக்க வேண்டும் என்பதே என்பதையும்  நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.ஓரு நோய்க்கு வைத்தியம் பார்க்க போய் பல நோய்களை உருவாக்கிக் கொண்டு மருந்து, மாத்திரைகள் என காலமெல்லாம் அவதிப்படும் அவல நிலையில் இருந்து மீள வேண்டுமானால் மருந்தில்லா அகுபங்சர் சிகிச்சை பெரிதும் உதவி புரிகிறது .

முதலுதவி சிகிச்சைகள்

அகுபங்சர் மருத்தும் பற்றிய விரிவான தகவல்கள் டாக்டர் பரீத் அபுசாலி அவர்களுடன் ஓரு நேர்காணல் யக்கம் :
 
உங்களுக்கு மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.                  
 மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்  
உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்குமுதல்உதவிசெய்துகாப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :
கட்டை விரல் நகத்திற்கு  நேர் கீழ் உள் பக்கம்  (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம். 99 சதவீதத் தலைவலிகள் இம் முறையின்மூலம் குணமாகி விடும். இன்ஷா அல்லாஹ்!

வயிற்றுப் பிரச்னைகள் : தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும்.