நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே தான் இருக்கிறது. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.
இயற்கைச் சக்திகள் இணைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். இரத்த ஓடுபாதைகள், அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள், தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் சிறந்த மருந்தில்லா மருத்துவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம் பழமையான மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதற்கும் நம்மிடம் இருந்து மறைந்து போனதற்கும் முக்கியமான காரணம் தன்னையும் தன்பரம்பரையும் தவிர வேறுயாருக்கும்தெரியக்கூடாது என்று மறைத்து வைத்ததுதான். ஒவ்வொரு தாத்தாக்களும் தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை கொடுத்ததால்தான் காலப்போக்கில் மறைந்தது. இதனால் தான் நம் அறிய மருத்துவக் குறிப்புகள் ம(ற)றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள், எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.
அக்குபஞ்சர் மருத்தவம் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலபேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கல்களை இந்த அக்குபஞ்சர் முறையில் தங்களை குணப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாகக்கூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால் குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்!
நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.
நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில், ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படும்.