உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

புதன், 16 நவம்பர், 2011

கீரையும், வெந்தயமும் இன்றியமையாதவை!


நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்து, நாம் அதிகம் சிந்திப்பதில்லை. திருப்பூரைச் சேர்ந்த கபீர் என்பவர், கீரை மற்றும் வெந்தயம் குறித்த விவரங்களை தொகுத்தளிக்கிறார்:

கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்: கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. 
இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரக்கீரை, பாலக்கீரை, தண்டு கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.
கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரை சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 5 வயதிற்குட்பட்ட 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைப்பாட்டால், கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது, உடலில் வைட்டமின் ஏவாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
கீரையில் உள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதால், கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது. கீரைகள் பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு (ஒரு நாளைக்கு)
* பெண்களுக்கு 100 கிராம்.
* ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (46 வயது) 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
குறிப்புகள்:
கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே, பெரும்பாலான பெண்கள், கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டீரியாக்கள், கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப் பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரையை மாசுப்படுத்துகின்றன.

எனவே, கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க, சமைப்பதற்கு முன், கீரையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

கீரைகளை நன்கு சமைத்து, மசித்து, கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே, சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரம், கீரை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரை சமைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். கீரையை வெயிலில் உலர்த்தினால், அதில் உள்ள பீடா கராட்டின் சத்து அழிந்து விடும்.

சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்க உதவும் வெந்தயம்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதன் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுப்படி, வெந்தயம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. வெந்தயம் எந்த அளவு, எந்த நிலையில் மற்றும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதன் விவரம் கீழே உள்ளது.

* வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும்.
* வெந்தயம் அதிக நார்சத்து (50 சதவீதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கெலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது, வெந்தயத்தில் உள்ளது.

* உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைப் பொறுத்தது. 25 முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது.

*  ஆரம்ப காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம்.

*  வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக இடித்தோ, தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உணவுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும்.

* இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது, அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது, விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவுக்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும் போது, உண்பவரின் ருசிக்கேற்ப, உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
*  ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

*  வெந்தயம் எடுத்து கொள்வதுடன், தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்கச் செய்யும். எனவே, அதிக கலோரி கொடுக்கக்கூடிய, குறிப்பாக “சாச்சுரேட்டேட்’ கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*  இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு, ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

*  வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரை நோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.  ஆயினும், உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும். சர்க்கரை நோயால் திடீரென ஏற்படும் உடல்நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.
                                                           நன்றி:
                                                   

செவ்வாய், 18 அக்டோபர், 2011

அக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்

அகுபங்சர் மருத்தும் பற்றிய விரிவான தகவல்கள் டாக்டர் பரீத் அபுசாலி அவர்களுடன் ஓரு நேர்காணல் யக்கம் :
 
உங்களுக்கு மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.                  
 மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்  
உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்குமுதல்உதவிசெய்துகாப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :
கட்டை விரல் நகத்திற்கு  நேர் கீழ் உள் பக்கம்  (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம். 99 சதவீதத் தலைவலிகள் இம் முறையின்மூலம் குணமாகி விடும். இன்ஷா அல்லாஹ்!

வயிற்றுப் பிரச்னைகள் : தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஆர்கானிக் உணவுப் பொருட்கள்!

Post image for ஆர்கானிக் உணவுப் பொருட்கள்!
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்  பொருட்கள் விற்கப்படும் “மால்” கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. “மால்” கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்டசமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு:இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.
ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.
 வெண்ணெய், நெய், வனஸ்பதி:
வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.
உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
பாலிஷ் அரிசி:
அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சந்தை காய்கறி, பழங்கள்:
உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப் பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.
தினகரன்

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தும்பைப் பூ

தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்

சனி, 10 செப்டம்பர், 2011

எளிய கண் விழிப்பயிற்சி:

சூரிய ஒளியில் கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்தவும் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்தவும்.இவ்வாறு  ஆறு முறை மாறி மாறி மெதுவாகச் செய்யவும். பின்னர் ஆறு முறை கண்களை நன்றாக இமைக்கவும்.
பின்பு இது போல் கண் விழிகளை மெதுவாக மேலும் கீழும் 5 முறை நகர்த்தி பின் ஐந்து முறை இமைக்க வேண்டும்.பின்பு கண் விழிகளைக் குறுக்கு வாட்டில் மேலும் கீழும் 5 முறை மெதுவாக நகர்த்திய பின்பு ஐந்து முறை இமைக்கவும்.
பின்பு கண் விழிகளை மட்டும் இடது புறத்திலிருந்து மேல் நோக்கி வலப்புறமாக செல்ல விட்டு கீழ்புறம் நகர்த்தி முழு வட்ட வடிவில் ஐந்து முறை நகர்த்தி பின்பு ஐந்து முறை இமைக்க வேண்டும். அதே போல் வலப்புறத்தில் இருந்து ஆரம்பித்து கண் விழிகளை முழு வட்டத்தில் நகர்த்தி 5 முறை கண்களை இமைக்க வேண்டும்.
பயன்கள்:
கண் குறைபாடுகள் சரியாகும். கண்பார்வை உடனடியாகச் சரியாகிறது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது..
                                                                                                              நன்றி:மாலைமலர்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்!

காளான் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சனி, 6 ஆகஸ்ட், 2011

நடை பயிற்சி (Walking)

நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  ஆராய்ந்து கூறியுள்ளனர்.  விஞ்ஞான யுகத்தில் வெகுதூரம் சென்ற மேலை நாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் சித்தர்கள் சொன்னதை இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள்.  சித்தர்களின் அறிவாற்றல் மேலைநாட்டு மக்களுக்கு புரிய ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்தர்கள் வழிவந்த நம் மக்கள், அறிவு ஜீவிகளாக தன்னைக் காட்டிக்கொண்ட மேலை நாட்டு மக்களின் அறியாமையை நாகரிகம் என்ற பெயரில்  நாம் பின்பற்றி வந்தோம்.  விளைவு மேற்கண்ட நோய்கள்தான்.  ஆயுளையும் குறைத்து ஆரோக்கியத்தையும் இழந்து பேதை மனிதனாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அறிவிலும், ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் அவசியம் பயிற்சி தேவை என்பதை சொல்லவே தியானம், யோகா மற்றும் மலை ஏறுதல், பாதையாத்திரை என பல வழிமுறைகளைச் செல்லிவைத்தனர்.  அவர்களும் அதைக் கடைப் பிடித்து நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர்,
திடகாத்திரமான 100 இளைஞர்கள் ஒரு நாட்டின் சரித்திரத்தை மாற்றலாம் என்று கூவி அழைத்த சுவாமி விவேகானந்தர் அவதரித்த தேசமும் இதுதான்.  அந்த இளைஞர்கள் இன்று இல்லை.
மேலை நாட்டு மது வகையில் சிக்கி ஆரோக்கியத்தை இழந்து நிற்கும் இளைஞர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.
பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் இல்லை.  விளையாட அனுமதிப்பதும், சொல்லிக் கொடுப்பதும் இல்லை.  விளையாட்டு, உடற்பயிற்சி என்பது ஏதோ ஒரு தேவையற்றது என்று பெற்றோர் நினைக்கின்றனர்.
படிப்பு ஒன்றே எல்லாவற்றையும் தந்து விடாது. நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தானே நன்றாக படிக்கவும் முடியும்.  நோய்களின் தாக்கம் வந்த 45 வயதை கடந்தவர்கள்தான் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்கிறார்கள்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு.
குழந்தைகளுக்கு படிப்புடன் உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள்.  பாரதி கூறிய படி மாலையில் விளையாட அனுமதியுங்கள்.  அப்போதுதான்  திடகாத்திரமான பலமான இளைஞனாக உங்கள் குழந்தை வளருவார்கள்.
உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன.  அவற்றில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், என பலவகை உண்டு.  இந்த இதழில் நடைப்பயிற்சி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது.  பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.
பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது.  காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு  நடப்பதுதான் நடைப்பயிற்சி.  நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல.  குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும்.  கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.
நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது.
மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும்.  நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.
நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்.
· உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
· உடல் உறுப்புகள் நன்கு இயங்கும்.  வியர்வை நன்கு வெளியேறும்.  இதனால் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.
· காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.
· நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது,  மூளை புத்துணர்வு பெறுகிறது.  ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
· எலும்புகள், பலப்படும்.  தசைகள் சுருங்கி விரியும்.
· உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
· நல்ல உறக்கம் கிட்டும்.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
· முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.
· கை, கால் மூட்டு வலி நீங்கும்.
· செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.
· முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
· தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.
நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும்.  ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி.  தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

நன்றி:- நக்கீரன்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அகுபங்சர் மருத்தும் பற்றிய விரிவான தகவல்கள் டாக்டர் பரீத் அபுசாலி அவர்களுடன் ஓரு நேர்காணல்- பாகம்-1

கேள்வி:டாக்டர்  அகுபங்சர்  சிகிச்சை என்றால் என்ன?
அகு பங்சர் சிகிச்சை என்பது மயிரிழையை காட்டிலும் மிக மெல்லிய ஊசிகளை கொண்டு உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக்கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில்  பயன்படுத்தப்பட்டு வந்தது.
       நம் ணடலின் உள்உறுப்பு களின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள தேக்கம் அல்லது குறைபாடே நோயாகும். அகுபங்சர் நாடிப்பரிசோதனை மூலம்  சக்தி ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து, அதனை சரிசெய்யக்கூடிய அகுபங்சர் புள்ளியினை தூண்டுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.


கேள்வி:டாக்டர் அகுபங்சர் முறையில் உடலில் நிறைய ஊசிகளை நம்புகளில் செலுத்தி, அவற்றில் மின்சாரம் செலுத்தப்படும் என்று கூறுகிறார்களே?
                அகு பங்சர் சிகிச்சை என்பது  ஓன்றிரண்டு புள்ளிகளில் தோல், சதைகளில் சிகிச்சையளிப்பது தான். நம்புகளில் அல்ல. இன்னும் சொல்வதானால் அகுபங்சர் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியபோது அநதப்பகுதிகளின் தன்மைக்கேற்ப  மாறுதல்கள் உருவாயின. அமெரிக்க, பிரட்டன் போன்ற நாடுகளில் இம்முறை பரவிய பின்பு வணிகமயமாக்கப்பட்டது. நோயாளிகளிடம் பணம் பறிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் பின்பற்றப்பட்டது. அதன் விளைவுகள் தான் மின்தூண்டல் சாதனங்கள்(Electrical Stimulator)   சக்தியளவு பரிசோதனை கருவி (Computer Meridian Diagnosis)  துணைஉணவுகள் எனும் மருந்துகள் Supplementary food),
இரத்த ஓட்டத்தை சீரமைக்கும் கருவி (Blood Clrculative Massagers)போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றுக்கும் அகுபங்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.


                                                                                                              தொடரும்.......

சனி, 30 ஜூலை, 2011

கல்லீரலின் செயல்பாடுகள்: Functions of liver


fy;ypuypd; nray;ghLfs; Functions of liver
1.gpj;jePhpid Ruf;fpwJ
2.fpisNfh[id cUthf;fp kw;Wk; Nrkpj;J itf;fpwJ.
3.fy;ypuy; iel;u[id ntspNaw;wp mkpNdh mkpyq;fis rpijTw;W A+hpahthf khw;wkilar; nra;J ntspNaw;WfpwJ
4.gpsh];kh Gujq;fis My;Gkpd; f;NshGypd; Nghd;wtw;iw cUthf;Ffpd;wJ.
5.epiwTwhf; nfhOg;Gfis unsaturated fats njtpl;ba nfhOg;G g+hpj;j nfhOg;ghf khw;wpaikf;fpwJ.
6.,Uk;G kw;Wk; tpl;lkpd;  B 12 Mfpatw;iw Nrkpj;J itf;fpd;wJ. ,it ,uj;j rptg;gDf;fs; cUthtjw;F mbg;gil NjitahdjhFk;.
7.GNuj;uhk;gpd; kw;Wk; iggpNuh[d; fibnogem Nghd;tw;wpid  cUthf;Ffpd;wJ ,it ,uj;jk; ciwAk; jd;ikf;F mbg;gil NjitfshFk;.
8.,aw;ifapy; FUjpapid ciwa tplhky; jLj;J itf;Fk;  anticoagulant n`g;ghpd; Heparvd;w nghUspid cUthf;Ffpd;wJ ,g;nghUs; ,uj;j ehsq;fspy; cs;s fl;bapid fiug;gjw;Fk; kw;Wk; ,uj;j tq;fpfspy; Nrkpf;Fk; ,uj;jjjpid; ghJfhg;gjw;Fk; MzbNfhahFyz;l; cjTfpwJ.
9. B-er;R nghUspd; nray;fis jLf;fpd;wJ.
10.itl;lkpd; A  D kw;Wk; K  tpid Nrkpf;fpd;wJ.
11.khTg;nghUs;fs; Gujq;fs; kw;Wk; nfhOg;Gfs; Mfpatw;iw [Puzpf;fg;gLfpwJ.
12.ek; cliy fpUkpfspy; ,Ue;Jk; njhw;W Neha;fspy; ,Ue;Jk; ghJfhf;fpwJ. Phagocytosis

வியாழன், 28 ஜூலை, 2011

கல்லீரல் அமைப்பு ? பகுதி-2


fy;ypuy; mikg;G
fy;ypuy; vd;gJ nry;fspd; njhFg;gpd; cUthf;fk; ,f;fy;yPuiyr; Rw;wp fpsprd; Nfg;#y; #og;gl;Ls;sJ. ,e;j Nfg;#y; cillisons capsule cs;Ns rpW kly;fs; Hepatic lobules MWNfhz tbtj;jpy; cs;sd. xt;nthU rpWkly;fSk; nrd;ly; rpiufs; nfhz;Ls;sJ. Xt;nthU rpWkly;fspilNa
A.fy;ypuy; rpiw  portal vain 
B.fy;ypuy; jkdp Hepatic artery
C.fy;ypuy; ehsd;fs;  Hepatic ducts