உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அகுபங்சர் மருத்தும் பற்றிய விரிவான தகவல்கள் டாக்டர் பரீத் அபுசாலி அவர்களுடன் ஓரு நேர்காணல்- பாகம்-1

கேள்வி:டாக்டர்  அகுபங்சர்  சிகிச்சை என்றால் என்ன?
அகு பங்சர் சிகிச்சை என்பது மயிரிழையை காட்டிலும் மிக மெல்லிய ஊசிகளை கொண்டு உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக்கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில்  பயன்படுத்தப்பட்டு வந்தது.
       நம் ணடலின் உள்உறுப்பு களின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள தேக்கம் அல்லது குறைபாடே நோயாகும். அகுபங்சர் நாடிப்பரிசோதனை மூலம்  சக்தி ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து, அதனை சரிசெய்யக்கூடிய அகுபங்சர் புள்ளியினை தூண்டுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.


கேள்வி:டாக்டர் அகுபங்சர் முறையில் உடலில் நிறைய ஊசிகளை நம்புகளில் செலுத்தி, அவற்றில் மின்சாரம் செலுத்தப்படும் என்று கூறுகிறார்களே?
                அகு பங்சர் சிகிச்சை என்பது  ஓன்றிரண்டு புள்ளிகளில் தோல், சதைகளில் சிகிச்சையளிப்பது தான். நம்புகளில் அல்ல. இன்னும் சொல்வதானால் அகுபங்சர் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியபோது அநதப்பகுதிகளின் தன்மைக்கேற்ப  மாறுதல்கள் உருவாயின. அமெரிக்க, பிரட்டன் போன்ற நாடுகளில் இம்முறை பரவிய பின்பு வணிகமயமாக்கப்பட்டது. நோயாளிகளிடம் பணம் பறிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் பின்பற்றப்பட்டது. அதன் விளைவுகள் தான் மின்தூண்டல் சாதனங்கள்(Electrical Stimulator)   சக்தியளவு பரிசோதனை கருவி (Computer Meridian Diagnosis)  துணைஉணவுகள் எனும் மருந்துகள் Supplementary food),
இரத்த ஓட்டத்தை சீரமைக்கும் கருவி (Blood Clrculative Massagers)போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றுக்கும் அகுபங்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.


                                                                                                              தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக