GB 1(TONGZILIAO) : லாங்ஸிலியோ :
அமைவிடம் : கண்ணின் வெளிப்பக்க ஓரத்திலிருந்து 0.5 சூன் தூரத்தில் உள்ளது.
GB 2(TINGHUI) : டிங்குயி :
அமைவிடம் : வாயை திராக்குபோது காதின் முன்புறம் ஏற்படக்கூடிய பள்ளத்தில் SI19-க்கு கீழே 0.1 சூன் தூரத்தில் உள்ளது. குழியில் உள்ளது.
GB 3(SHANGUAN): ஷாங்குவான் :
அமைவிடம் : ST 7-க்கு நேர்மேலெ நெற்றிபோட்டு பள்ளத்தின் மத்தியில் உள்ளது.
GB 4(HANYAN) : ஷான்யான் :
அமைவிடம் : ST 8-க்கும் GB 7-க்கும் இடையில் 4-ல் 1-பங்கு தூரத்தில் உள்ளது.
GB 5(XUANLU) : ஷூவான்னு :
அமைவிடம் : ST 8-க்கும் GB 7-க்கும் மத்தியில் உள்ளது.
GB 6(XUANLI) : ஷூவான்லி :
அமைவிடம் : GB 5-க்கும் GB 7-க்கும் இடையில் உள்ளது.
GB 7(QUBIN) : கூபன் :
அமைவிடம் : SJ 20-க்கு 1 சூன் முன்பக்கமாக உள்ளது.
GB 8(SHUAIGU) : ஷூயேகூ :
அமைவிடம் : காது மடலின் மேற்புற நுனியிலிருந்து தலையின் பக்கவாட்டில் உள்ளது.
GB 9(TIANCHONG) : டியான்சாங் :
அமைவிடம் : GB 8-லிருந்து 0.5 சூன் பின்பக்கத்தில் உள்ளது.
GB 10(FUBAI) : ஃபுபாய் :
அமைவிடம் : GB 9-யும் GB 11-யும் இணைக்கும் வளைகோட்டின் மத்தியில் உள்ளது.
GB 11(HEAD-QIAOYIN) : ஹெட்சியாவோயின் :
அமைவிடம் : GB 10-லிருந்து 1 சூன் கீழே உள்ளது.
GB 12(HEAD WANGU) : ஹெட்வாங்கு :
அமைவிடம் : DU 16-ன் மட்டத்தில் GB 11-லிருந்து 0.5 சூன் கீழ் உள்ளது.
GB 13(BENSHEN) : பென்ஷென் :
அமைவிடம் : DU 24-லிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் முன்புற முழு எல்லையிலிருந்து 0.5 சூன் தூரத்தில் உள்ளது.
GB 14(YANGBAI) : யாங்பாய் :
அமைவிடம் : புருவத்தின் மத்தியில் ஒரு சூன் மேலே நெற்றியில் உள்ளது.
GB 15(HEAD CINQI) : ஹெட்லின்ங்கி :
அமைவிடம் : ST-க்கும் DU 24-க்கும் இடையில் உள்ளது.
GB 16(MUCHUANG) : மூச்சுவாங் :
அமைவிடம் : GB 15-யும் GB 21-யும் இணைக்கும் கோட்டில் GB 15-லிருந்து 1.5 சூன்கள் கீழே உள்ளது.
GB 17(ZHENGYING) : ஸெங்யின் :
அமைவிடம் : GB 16-லிருந்து 1.5 சூன்கள் கீழே உள்ளது.
GB 18(CHENGLING) : செங்லிங் :
அமைவிடம் : GB 17-லிருந்து 1.5 சூன்கள் கீழே உள்ளது.
GB 19(NAOKONG) : நவோகாங் :
அமைவிடம் : தலையின் பின்புறத்தில் GB 20-க்கு நேர்மேலே DU 20-ன் மட்டத்தில் உள்ளது.
GB 20(FEBGCHI) : ஃபெங்சி :
அமைவிடம் : தலையின் பின்பக்க எலும்பில் கீழ் முடி எல்லையிலிருந்து சற்று மேலே துருத்தியிருக்கின்ற எலும்பிற்கு கீழ் உள்ளது.
GB 21(JIANJING) : ஜியான் ஜிங் :
அமைவிடம் : LI 15-யும் DU 14-யும் இணைக்கும் நேர் கோட்டில் தோள்பட்டையின் மத்தியில் உள்ளது.
GB 22(YUANYE) : யுவான்யே :
அமைவிடம் : அக்குள் மத்திய கோட்டில் அக்குளிலிருந்து 3 சூன்கள் கீழே 5 வது 6 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது.
GB 23(ZHEJIN) : ஷிஜின் :
அமைவிடம் : GB 22-லிருந்து 1 சூன் முன் பக்கத்தில் 5 வது 6 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது.
GB 24(RIYUE) : ஜியுவே :
அமைவிடம் : மார்பு காம்பிற்கு நேர் கீழே 7 வது 8 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது.
GB 25(JINGMEN) : ஜிங்மென் :
அமைவிடம் : 12வது விலா எலும்பு முடியுமிடத்தில் உள்ளது.
GB 26(DAIMAI) : டாய்மாய் :
அமைவிடம் : தொப்புளூக்கு நேராக ஒரு
படுக்கை கோடும் 11 வது விலா எலும்பு முடியுமிடத்தில் இருந்து ஒரு
செங்குத்துக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் இடத்தில் உள்ளது.
GB 27(WUSHU) : ஊஷூ :
அமைவிடம் : வயிற்றின் பக்கவாட்டில் தொப்புளிலிருந்து 3 சூன்கள் கீழே வரையப்படும் படுக்க கோட்டில் இடுப்பெலும்பின் முன்புறம் உள்ளது.
GB 28(WEIDEO) : வெய்டவோ :
அமைவிடம் : GB 27-லிருந்து 0.5 சூன் கீழே உள்ளது.
GB 29(FEMUR JULIAO) : ஃபீமர் ஜீலியவோ :
அமைவிடம் : இடுப்பெலும்பின் முன்புற மேல் பக்கத்தையும் தொடை எலும்பின் முன்புற தலைபாகத்தையும் இணைக்கும் கோட்டின் மத்தியில் உள்ளது.
GB 30(HUANTIAO) : ஹீவான்டியவோ :
அமைவிடம் : வால் எலும்பின் கீழ்
விளிம்பிலிருந்து ஒரு படுக்கை கோட்டில் பிட்டத்தை 3 பகுதியாக பிரித்தால்
உடலின் பின்புற மத்தியிலிருந்து 3-ல் 2 பங்கு தூரத்தில் உள்ளது.
GB 31(FENGSHI) : ஃபெங்ஷீ :
அமைவிடம் : நேராக நின்று கையை உடலோடு சேர்த்து வைக்கும்போது நடுவிரல் தொடையை தொடுமிடத்தில் உள்ளது.
GB 32(FEMUR ZHONGDU) : ஃபீமர் ஸாங்டூ :
அமைவிடம் : GB 31-லிருந்து 2 சூன்கள் கீழே உள்ளது.
GB 33(XIYANGGUAN) : ஷியாங்குவான் :
அமைவிடம் : முழங்காலை மடக்கும் பொழுது GB 34-லிருந்து 3 சூன்கள் மேலே உள்ளது.
GB 34(YANGLINGQUAN) : யாங்லிங்குவான் :
அமைவிடம் : ஃபிபூலா எலும்பின் தலைப்பாகத்திற்கு கீழே உள்ளது.
GB 35(YANGTIAO) : யாங்ஜியாவோ :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 7 சூன்கள் மேலே ஃபிபுலா எலும்பின் பின்பக்கத்தில் உள்ளது.
GB 36(WAIQIU) : வாய்குயி :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 7 சூன்கள் மேலே ஃபிபுலா எலும்பின் முன்பக்க ஓரத்தில் உள்ளது.
GB 37(GUANGMING) : குவாங்மிங் :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 5 சூன்கள் மேலே உள்ளது.
GB 38(YANGFU) : யாங்ஃபூ :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 4 சூன்கள் மேலே ஃபிபுலா எலும்பின் முன்பக்க ஓரத்தில் உள்ளது.
GB 39(XUANZHONG) : ஷூவான்சாங் :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 3 சூன் தூரம் மேலே உள்ளது.
GB 40(QUXU) : க்யூஷூ :
அமைவிடம் : வெளிப்புற கணூக்கால் மூட்டு
எலும்பின் முன்புறத்திலிருந்து ஒரு செங்குத்து கோடும் கீழ்
பக்கத்திலிருந்து ஒரு படுக்கை கோடும் வெட்டிக் கொள்ளும் புள்ளி.
GB 41(FOOT LINGUI) : ஃபுட்லிங்கி :
அமைவிடம் : பாதத்தின் மேற்புறம் 4 வது 5 வது கால் விரல் எலும்புகள் சேரும் இடத்தில் உள்ளது.
GB 42(DIWUHUI) : டிவுஹி :
அமைவிடம் : GB 43-லிருந்து 1 சூன் மேலே உள்ளது.
GB 43(XIAVI) : ஷியாஸி :
அமைவிடம் : 4வது 5வது விரல்கள் சேருமிடத்தில் உள்ளது.
GB 44(QUIAOYIN) : புட்சியாகின் :
அமைவிடம் : காலின் 4 வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் உள்ளது.