உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

புதன், 29 ஆகஸ்ட், 2012

கல்லீரல் மெரிடியன்


LIV 1(DADUN) : டாடுன் :

அமைவிடம் : கால்கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கும் கட்டை விரல் எலும்புகள் சேரும் மூட்டிற்கும் இடையில் உள்ளது.

LIV 2(XINGJIAN) : ஷிங்ஜியான் :

அமைவிடம் : 1-வது மற்றும் 2-வது கால் விரல்கள் சேருமிடத்தில் உள்ளது.

LIV 3(TAICHONG) : டாய்சாங் :

அமைவிடம் : 1வது மற்றும் 2வது கால் விரல்கள் சேருமிடத்தில் இருந்து 2 சூன்கள் மேலே உள்ளது.

LIV 4(ZHONGFENG) : ஸாங்ஃபெங் :

அமைவிடம் : பாதத்தின் மேற்புறத்தில் உட்புற கணுக்கால் மூட்டின் முன்புறத்தில் பாதத்தை கீழ்புறம் வளைக்கும் பொழுது ஏற்படும் பள்ளத்தில் உள்ளது. ST 41-க்கும் SP-க்கும் மத்தியில் உள்ளது.

LIV 5(LIGOU) : லிகௌ :

அமைவிடம் : உட்புற கணுக்கால் மூட்டிலிருந்து 5 சூன்கள் மேலே டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது.

LIV 6(FOOT ZHONGDU) : ஃபுட்ஸாங்கு :

அமைவிடம் : உட்பக்க கணுக்கால் மூட்டிலிருந்து 7 சூன்கள் மேலே டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது. கல்லீரலின் எச்சரிக்கை புள்ளி.

LIV 7(XIGUAN) : ஷிகுவான் :

அமைவிடம் : SP 9-லிருந்து 1 சூன் முன்பக்கத்தில் உள்ளது.

LIV 8(QUQUAN) : குகுவான் :

அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்க ஓரத்திலிருந்து 0.5 சூன் செங்குத்தாக மேலே உள்ளது. K 10-க்கு 0.5 சூன் மேலே உள்ளது.

LIV 9(YINBAO) : யின்பாவோ :

அமைவிடம் : தொடை எலும்பின் உட்புற கீழ் விளிம்பிலிருந்ஹு 9 சூன்கள் மேலே உள்ளது.

LIV 10(FENUR WULI) : ஃபீமர் ஊலி :

அமைவிடம் : ST 30-லிருந்து 3 சூன்கள் கீழே தொடையின் உட்பக்கமாக உள்ளது.

LIV 11(YINLIAN) : யின்லியான் :

அமைவிடம் : ST 30-லிருந்து 2 சூன்கள் கீழே தொடையின் உட்பக்கமாக உள்ளது.

LIV 12(JIMAI) : ஜமாய் :

அமைவிடம் : REN 2-லிருந்து 2.5 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.

LIV 13(ZHANGMEN) : ஸாங்மென் :

அமைவிடம் : 11வது விலா எலும்பின் கடைசியில் அதாவது நுனியில் உள்ளது. யாங் உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும் புள்ளி.

LIV 14(QIMEN) : கிமென் :

அமைவிடம் : மார்புகாம்பு கோட்டில் 8வது 7 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது. ஆபத்தான புள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக