உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வியாழன், 29 ஜனவரி, 2015

அக்குபஞ்சரில் ஐம்பூத புள்ளிகள்


அக்குபஞ்சரில் ஐம்பூத புள்ளிகள்
* * * * * * * * * * * * * * * * * * *
அக்குபஞ்சர் என்பது பரம்பரிய சீன மாற்று மருத்துவம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறை. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகளும் இல்லை. பக்கவிளைவுகளும் இல்லை.
அக்குபஞ்சர் மனித உடலில் உள்ள முக்கியமான (பாதிக்கப்பட்ட உறுப்பின்) புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளைச் செலுத்தி உள்ளுறுப்புகளை சரியான முறையில் தூண்டி சீராக செயல்பட வைத்து நோயைக் குணமாக்கும் ஒரு மருந்தில்லா மருத்துவம்.
மேலும் நம் உடலில் உள்ள நாடித்துடிப்பு (Pulse) மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை எளிய முறையில் கண்டறிந்து முற்றிலும் குணமாகக்கூடிய வைத்திய முறையாகும். ஆங்கில மருத்துவம் கைவிட்ட பல நோய்களுக்கு மாற்று மருத்துவ முறைகள் மட்டுமே மிகச் சிறந்த நிரந்தர நிவாரணி மற்றும் தீர்வு என மக்கள் அறிந்து தேடியும் நாடியும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அக்குபஞ்சர் முறையில் உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்பின் சக்தி நாளங்களைத் தூண்டுவதால் அவை நரம்பு மண்டலம் மற்றும் வயிற்றின் உள்ளுறுப்புகளை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது. நோய்களுக்கு தீர்வும் கிடைக்கிறது. உடலும் ஆரோக்கியம் பெற்று உறுப்புக்களுக்கு வலிமை கூட்டுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) அக்குபஞ்சர் மருத்துவ முறையை அங்கீகரித்தப் பிறகே பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்குபஞ்சர் மருத்துவத்தை முறையாக கற்பித்து வருகின்றன.

மனிதனின் உடற்கூறுகள் எலும்பு, நரம்பு, தசை, மூட்டு, தோல், என ஐந்து வகைகளாய் கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சம் எப்படி நிலம் , நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறதோ... அதே போல நமது உடலும் பஞ்ச பூதங்களால் தான் இயங்குகிறது. இந்த பஞ்ச பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும், கட்டுப்படுத்தியும் வைத்திருப்பதையும் மறுக்க இயலாது... நமது உடலும் அப்படித்தான்... இந்த பஞ்ச பூதங்களும் நமது உடலில் ஆதிக்கம் செலுத்தி இயங்க வைக்கிறது. இவைகள் சீராக இயங்கும் வரை உடலும் சீராக இயங்கும். இந்த பிரபஞ்சத்திலும், நம் உடலளவிலும் பஞ்சபூதம் சரிவர இயங்காமலோ, அல்லது அதிவேகமாய் இயங்கத் தொடங்கினாலோ அப்போது தான் பிரச்சனைகள் பல ரூபத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும்.

நமது உடலில் மொத்தம் 361 அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன . முக்கியமான 12 உறுப்புகளில் ஒரு உறுப்பிற்கு 5 புள்ளிகள் வீதம் 60 பஞ்சபூத புள்ளிகளை அக்குபஞ்சர் மிக முக்கிய புள்ளிகளாக அடையாளப்படுத்துகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக