உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வியாழன், 5 மே, 2011

இதயம்

இதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது முதுகெலும்பிகளில் காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவது ஆகும். இதயமானது இதயத்தசை என்னும் சிறப்புத் தசையால் ஆனது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.



அமைப்பு

மனித உடலில் இதயமானது மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.

வலது இதயத்தின் பணியானது அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாக குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது.

இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தை பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது.

இதயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட தடிப்பாக உள்ளது.

வலது இதயம்

இதயத்தில் உள்ள வலது ஆரிக்கிளும் வலது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து வலது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்டிரிக்கிள், பல்மோனரி டிரங்க் ஆகிய மூன்றும் சேர்த்து வலது இதயம் என்று குறிக்கப்படுவது உண்டு.

கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதியானது உடலின் பல பகுதிகளில் இருந்தும் வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது மூவிதழ் வால்வு வழியாக வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப் படுகிறது. வலது வெண்ட்டிரிக்கிள் பல்மோனரி வால்வு வழியாக குருதியை பல்மோனரி தமனிக்குள் செலுத்துகிறது.



வலது ஏட்ரியம்
வலது ஏட்ரியம் (முந்தைய வழக்கு: வலது ஆரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது இரத்தத்தை மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை, இதயச்சிரை ஆகியவற்றில் இருந்து பெறுகிறது. பின் குருதியானது மூவிதழ் வால்வு வழியாக வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப் படுகிறது.



வலது வெண்ட்டிரிக்கிள்
வலது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்ஸிஜன் அற்ற இரத்தத்தை மூவிதழ் வால்வு வழியாக வலது ஏட்ரியத்தில் இருந்து பெறுகிறது. பின்னர் நுரையீரல் வால்வு வழியே நுரையீரல் தமனிக்கு அனுப்புகிறது.

இடது இதயம்

இதயத்தில் உள்ள இடது ஆரிக்கிளும் இடது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து இடது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இடது ஆரிக்கிள், இடது வெண்ட்டிரிக்கிள், மகாதமனி ஆகிய மூன்றும் சேர்த்து இடது இதயம் என்று குறிக்கப்படுவதும் உண்டு.

இடது ஆரிக்கிள் நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை பல்மோனரி சிரைகளின் வழியாகப்பெறுகிறது. பின் குருதி மிட்ரல் வால்வு வழியாய் இடது வெண்ட்டிரிக்களுக்கு அனுப்பப்படுகிறது. இடது வெண்ட்டிரிக்கிள் மகாதமனி வால்வு வழியாக இரத்தத்தை மகாதமனிக்குள் செலுத்துகிறது.



இடது ஏட்ரியம்

இடது ஏட்ரியம் மனித இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்றாகும். இது ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரையில் இருந்து பெறுகிறது. பின் இதனை இடது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்புகிறது.



இடது வெண்ட்டிரிக்கிள்


இடது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை இடது ஏட்ரியத்தில் இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.

இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக