உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

வயிற்றில் சங்கடம் - வாயு தொல்லை


இரப்பை வயிறு அழற்சி Gastritis எனப்படும். இதன் பெயரை வைத்து பலர் இதை வாய்வுத் (Gas) தொல்லை என்று நினைக்கிறார்கள். இல்லை, இது இரைப்பையில் ஏற்படும் வீக்கம். அல்சர் வருவதற்கு முன் ஆரம்பமாகி, அல்சரில் கொண்டு விடும். இந்த வீக்கம் அழற்சி, இரப்பையின் சுவர்களில் உருவாகும். Gastritis என்பது ஆயுர்தேத்தில் அமல பித்தம் எனப்படும். பித்த பிரகிருதிகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.
காரணங்கள்

• காரம், மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல். முன்பே சொன்ன மூன்று விஷயங்கள் Hurry, Worry, Curry. மற்றவரைப்பார்த்து பொறாமை படுதல் கூட வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரப்பிக்கும்.

• தொற்றுகளினால் (Infection). பேக்டீரியா, வைரஸ், ஃபங்கள் கிருமிகளால் வரும். பெயர் பெற்ற ஹெலிகோ பேக்டர் பைலோரி (Helicobacter Pylori) என்ற பயங்கர வாத ரகத்தை சேர்ந்த வலுமையான பேக்டீரியா காஸ்டிரைடீஸையும் உண்டாக்கும், பிறகு அல்சரையும் உண்டாக்கும். நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று வர வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்களால் இரப்பைக்கு போகும் ரத்தம் குறைந்த விடுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

• உடலின் நோய் தடுப்பு சக்தி குறைந்துவிட்டாலும் கேஸ்டிரைடீஸ் வரும்.

• சில நச்சுப் பொருட்களை உண்ணுதல், ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்ற மருந்தகளாலும் வரும். மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, இவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் வயிற்றை பாதிக்கும் பக்க விளைவுகள் உள்ளவை. இவற்றால் கேஸ்டிரைடீஸ் வரும். இந்த மாத்திரைகள், இரைப்பையின் சுவற்றிலுள்ள ப்ரோஸ்டா கிளான்டின் (Prosta glandin) என்ற ஹார்மோன் போன்ற வேதிப் பொருள் வற்றிப்போய் விடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு புண்கள் உண்டாகின்றன. புண்கள் தீவிரமாகி, அல்சராக மாறிவிடுகின்றன.

• திருப்பி, திருப்பி சொல்வது, மன இறுக்கம், டென்ஷன், ஸ்ட்ரெஸ், இவை காரணமாகலாம். காரணங்களை பொறுத்து கேஸ்டிரைடீஸ் பலவகைகளாக சொல்லப்படுகிறது.

அறிகுறிகள் / சிக்கல்கள்

• கேஸ்டிரைடீஸ் காண்பிக்கும் அறிகுறிகள் குறைவு. அறிகுறிகள் தோன்றினால் அவை – வலி, பிரட்டல், வாந்தி. இவற்றை நாம் அஜீரணம் என்றும் நினைப்போம். கேஸ்டிரைடீஸ் அல்சராக முன்னேறும் போது அறிகுறிகள் தீவிரமாகும்.
• இரப்பை அல்சரை உருவாக்குவது கேஸ்டிரைடீஸ். இதை அல்சரின் முன் நிலை என்றே கூறலாம்.

சிகிச்சை

ஆயுர்வேத அறிவுரைகள்

• மிளகாய், மசாலா, புளி, ஆரஞ்ச், சாத்துக் குடி, இவற்றை ஒதுக்கவும்.
• பூண்டு, இஞ்சி, தனியா, ஜீரகம் இவற்றின் உபயோகத்தை குறைக்கவும்
• அப்பளம், சட்னி, ஊறுகாய் – தவிர்க்கவும்.
• பால் நல்லது.
• வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கேரட் எடுத்துக் கொள்வது நல்லது. கேஸ்டிரைபீஸ் நோய்க்கு பீடா காரேடீன், வைட்டமின் ‘சி’ சேர்ந்த உணவுப் பொருட்கள் தேவையான மருந்தாகும்.
• புகையிலை, மது தவிர்க்கவும்
• மன அமைதி தேவை.

ஆயுர்வேத மருந்துகள்

• அதி மதுரம் கேஸ்டிரைடிஸை கட்டுப்படுத்த, பல தலை முறைகளாக பயன்படுத்தப்படும் மருந்து. இது எச். பைலோரி பாக்டீரியாவையும் வளரவிடாமல் தடுக்கும். ஒரு தேக்கரண்டி அதி மதுரப் பொடி, 1/2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தேன் இவற்றை கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்ளவும் தினசரி 2 வேளை போதுமானது.
• சதவாரி, நெல்லிக்காய் பொடி நல்ல, நிரூபிக்கப்பட்ட மருந்துகள்
• ஆம்லக்கி சூரணம், தாத்ரீலோஹா, சுகமார க்ருதம். போன்றவை கேஸ்டீரைடீஸ§க்கு கொடுக்கப்படும் மருந்துகள்.
எந்த மருந்தானாலும், உங்களின் ஆயுர்வேத மருத்துவரின்
ஆலோசனைப் படி உட்கொள்ளவும்

வயிற்றை துன்புறுத்தும் எச்.பைலோரி

ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori) என்ற பாக்டீரியா கேஸ்டிரைபீஸ் பாதிப்புக்கு முக்கிய காரணம். தவிர பெப்டிக் அல்சருக்கும், இந்த கிருமியே காரணம்.

எச்.பைலோரி கிருமிகள் இரப்பையின் ம்யூகோஸா என்ற ஜவ்வுப்படலத்தில் புகலிடம் தேடி வசிக்கின்றன. இந்த ஜவ்வுப் படலத்தால் கிருமிகளுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அமிலம் சுரக்கும் போதெல்லாம் எச்.பைலோரி, ஜவ்வுப் படலத்தை துளைத்து, உள்புறச் செல்களுக்குள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்கின்றன. தவிர யூரிஸ் (Urease) என்ற நொதியை (Enzyme) உண்டாக்குகின்றன. இதிலிருந்து வெளிப்படும் அம்மோனியாவுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்ந்து, நீர்த்துப் போய் விடுகிறது. இதனால் அமில ஆபத்தின்றி, தங்குதடையின்றி எச்.பைலோரி எல்லையில்லாமல் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கிருமிகள் ஏற்படுத்தும் ஒட்டைகளினால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. அட்ரோபிக் (Atrophic) கேஸ்டிரைடிஸ் ஏற்படுகிறது. ரத்த சோகையும் ஏற்படும்.

எச்.பைலோரிகிருமியுள்ள அனைவருக்கும் கேஸ்டிரைடீஸ் ஏற்படும். முழுவயிற்றையும் பாதிக்கலாம். இல்லை வயிற்றின் கீழ்பாகத்தை (Antrum) பாதிக்கலாம். கேஸ்டிரைட்டீஸ், அல்சராகமாறி நாளடைவில் புற்று நோயாக மாறும்.

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!

குட்டையான செடியில் பூக்கும் மலர்களைக் கொண்ட சீமைச்சாமந்தி(Chamomile) மருந்திற்கு பெரிதும் பயன்படுகிறது.. புதிய மற்றும் உலர்ந்த சீமைச்சாமந்தியின் பூக்கள் தேநீர் தயாரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு சுகாதார நலன்களை கொண்டுள்ளது.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சீமைச்சாமந்தியின் பூக்களில் தயாரிக்கப்படும் தேநீர் தசை தளர்வை நீக்கவும், மனதை ஆறுதல் படுத்தவும் உதவுகிறது. சீமைச்சாமந்தியின் தேநீர் தூக்கம் வராமல் அவதிபடுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இப்பூக்களின் தேநீரை தினசரி எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.

இதில் ஆக்ஸிஜனேற்ற பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளது. சீமைச்சாமந்தியின் தேநீர் அழற்சி விளைவித்தலுக்கு எதிரான முகவர் மற்றும் இயற்கையாக பாக்டீரியாவை எதிர்க்கும் சக்திகளை கொண்டுள்ளது. தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

குளிர்ந்த அல்லது சூடான நிலையிலும் தேநீர் செய்து நீங்கள் பருகலாம். நீங்கள் சுவையுடன் இருக்க வேண்டும் என விரும்பினால் தேநீருடன் தேன் அல்லது எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் பருகுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சீமைச்சாமந்தியின் தேநீரை கர்ப்பிணிபெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் காஃபின் கலந்திருப்பதால் கர்ப்பிணியின் கர்ப்பபையை சுருக்கும் வேலையை தேநீர் தூண்டுகிறது. ஆதலால் இது கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. மேலும் ஆஸ்துமா, அலர்ஜி, மற்றும் உணர்வு திறனை ஏற்படுத்தும் தோலை கொண்டவர்கள் தேநீர் மற்றும் மலர்களைக்கூட சுவாசிக்ககூடாது

நோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14 உணவுகள்



உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. ஒரே ஒரு வைட்டமினின் சத்து மட்டும் உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் சி கண்ணிற்கு நல்லது, ஓமேகா-3 இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்து, மனதுக்கும், உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது. எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலே, ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே, இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரி, இப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போம

ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி

மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இந்த பழங்களில் எலாஜிக் அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.

முட்டைக்கோஸ் குடும்பம்

brassica குடும்பம் என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ராக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின், indolesglucoinnolates மற்றும் ஐஸோதியோசயனைடுகள் (குறிப்பாக ப்ரோக்கோலியில் காணப்படும்) புற்றுநோயை தடுக்கின்றது.

மிளகாய்/மிளகுத்தூள்

மிளகாய் வயிற்றை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது நிபுணர்கள் மிளகாயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாதுகாப்பிற்கு உதவுகின்றது என்று கூறுகின்றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும். மேலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் நோயெதிர்ப்பு எதிர்ப்பு சக்தி தரும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அதிலும் குடைமிளகாயின் உள்

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் புற்றுநோயை தடுக்க உதவும். இவற்றில் இருக்கும் வைட்டமின் சி, லிமொனின் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பாதித்து அந்நோய் தாக்காமல் காக்கின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு, இளமையுடன் வைத்துக் கொள்கிறது.

பூண்டு மற்றும் வெங்காயக் குடும்பம்

பூண்டில் உள்ள அல்லிசின், மோசமான கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, இரத்தத்தின் நல்ல கொழுப்புத் தன்மையை அதிகப்படுத்தி, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. இதனால் இவை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. வெங்காயம், வெங்காயத் தாள், சின்ன வெங்காயம் போன்றவற்றில் ஆலியம் என்ற தன்மை உள்ளது. இவை இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள் புற்றுநோயை தீர்க்க உதவுகின்றது என்று கூறப்படுகின்றது. இது இதயத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.

கீரைகள்

பசலைக் கீரை, வெந்தயக்கீரை, லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்றவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஓட்ஸ்

இதயத்திற்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. அதற்கு தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், சக்கரை அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

மீன்

கானாங்கெளுத்தி, சால்மன், சூரை, மத்தி, கடல் மீன், ஏரி, ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்த உறைவைப் போக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கீல்வாதம், சரும அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் போன்ற அழற்சி ஏற்படுத்தும் நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

ஆலிவ்/ரேப்சீடு எண்ணெய்

அதிகமாக எண்ணெய் எடுத்து கொள்வது கெடுதல் தான். ஆனால் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக மோனோ அன்சாச்சுரேட்டர் (MUFA) ரக எண்ணெய் மிகவும் நல்லது. இது ஆலிவ் மற்றும் ரேப்சீடு எண்ணெயில் அதிகமாக உள்ளது.

பப்பாளி/கேரட்

மற்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிற காய்கறிகளான பூசணி, மாம்பழம், ஆப்ரிக்காட், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை விட, பப்பாளி மற்றம் கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது

சோயா பொருட்கள்

சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் மற்றும் டோஃபு உணவானது குறைந்த கொழுப்பு கொண்ட கால்சியம் நிறைந்த உணவாகும். ஜெனிஸ்டின் நிறைந்த சோயா தயாரிப்புகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது.

தக்காளி

புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது தக்காளி. லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டு போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில் கவுமாரிக் மற்றும் கோல்ரோஜினிக் அமிலம் அதிகமாக இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கின்றது.

தயிர்

ஆய்வு ஒன்றில் பாக்டீரியா அதிகம் உள்ள தயிரானது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம் அதிக உள்ளதால், இந்த உணவு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயன்படுகின்றது.

எனவே மேற்கூறிய அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் நோய்கள் தாக்காமல், சருமமும் நன்கு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும்.

அமுக்கரா தாவரவியல் பெயர்:Withania somnifera

யுவான் சுவாங்
பெயர் : அமுக்கரா

தாவரவியல் பெயர்:Withania somnifera

ஐந்தடி வரைக்கும் வளரக்கூடிய குறுஞ்செடி வகையாகும்.கோவை உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தானே வளர்ந்து காணப்படுகிறது.இதன் கிழங்குப்பகுதி மருத்துவ பயன் கொண்டது.ஏற்றுமதி செய்யும் நோக்கில் பயிரிடப்படுகிறது.உலர்ந்த கிழங்காகவோ பொடி வடிவிலோ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்று அழைக்கப்படுகிறது.

அமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,சூரணம் என பலரும் அறிந்திருப்போம்.

இது உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும் வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது.

அமுக்கிரா கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கி பால் ஆவிவில் வேகவைத்து உலர்த்தி பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வர இடுப்புப்பிடிப்பு குணமாகும்.

காயை அரைத்து படர்தாமரையில் தடவி வர குணம் கிடைக்கும்.

தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனில் குழைத்தோ,அல்லது பாலில் கலந்தோ காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், காசம்,பசியின்மை,மூட்டு வலி,ஜீரணக்கோளாறுகள்,உடல் வீக்கம்,முதுமைத்தளர்ச்சி ஆகியவை நீங்கும், படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கம் வரும், உடலில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும்.காமம் பெருக்கும்.

நீரிழிவு நோயாளிகள்,வயதானவர்கள் தினந்தோறும் அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த நலன் பயக்கும்.



அமுக்கரா சூரணம் 10கிராம், கசகசா 30கிராம், பாதாம் பருப்பு 10கிராம், ,சாரப்பருப்பு, 5கிராம், பிஸ்தாப்பருப்பு 5கிராம் என இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி அரைத்து 200மிலி பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து 90 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காணாமல் போன இளமை மீண்டும் நம் உடலில் குடி புகும்.வயாக்ரா என்பது செயற்கை, அமுக்கரா இயற்கை நமக்கு கொடுத்த கொடை.பக்க விளைவுகள் இல்லாதது

காய்கறி வாங்குவது ஒரு கலை - தெரியுமா உங்களுக்கு?

...............................................................................................


நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.

நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.

அதற்காகத்தான் இந்தப் பதிவு.

காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.

சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

வாழைக்காய்..
...........................

முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.

வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.

வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு..
.................................

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.

பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி..
.....................

முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும்.

சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது.

சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய்..
..............................

முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது.

இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள்.

அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம்.

காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.

தக்காளி...
....................

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும்.

பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

பீன்ஸ்...
............

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும்.

நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும்.

இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும்.

இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.

அவரைக்காய்...
............................
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான்.

மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய்...
..........................

கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும்.

காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது.

பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும்.

காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய்...
.................................

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம்.

ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும்.

அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல்.

காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

வெங்காயம்...
.........................

வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது.

பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது.

வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

முட்டைக்கோஸ்...
..................................

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.

பீர்க்கங்காய்...
...........................

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும்.

சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.

பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு...
.............................

சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும்.

உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.

ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய்...
........................

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய்...
..................................

பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.

எலுமிச்சம் பழம்..
...............................
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது.

காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.

கொத்துமல்லி, கருவேப்பிலை..
..........................................................

கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும்.

கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.

என்னங்க... காய்கறி எப்படி வாங்கணும்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா?... நன்றி..இணையக் குயில்

ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.!

* அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.

* இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

* காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

* ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.

* உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.

* ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

* இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

* படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

ஆரோக்கியத்தில் சிறந்தது லவங்கம்..!



சைவம், அசைவம் என இரண்டு வகை சமையலிலும் மணக்கும் லவங்கப் பட்டைக்கு எப்போதும் முதலிடம் தான். பட்டையை பொடி செய்து வைத்து தாளிப்பது மற்றும் அரைப்பதில் சேர்க்கலாம். உடல் ஆரோக்யத்திலும் லவங்கப் பட்டையின் பங்கு முக்கியமானது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். லவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி மற்றும் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். லவங்கப் பட்டையுடன் சுக்கு, ஓமம் மூன்றும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து காலை, மாலை உணவுக்கு பின்னர் சாப்பிட்டால் அனைத்து விதமான வாயுக் கோளாறுகளும் நீங்கும்.

லவங்கப்பட்டை, நிலவேம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் பூச்சிக் கடிகள் குணமாகும். இருமல் பிரச்னை உள்ளவர்கள் லவங்கப்பட்டையுடன் அக்காரா மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு மற்றும் இருமல் விலகும். லவங்கப்பட்டையுடன், அதிவிடயம் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இதில் ஐந்து கிராம் அளவு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். லவங்கப் பட்டையுடன், மாம்பருப்பு, கசகசா இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை 100 மிலி தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி குணமாகும். லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இதில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது நிற்கும். லவங்கப் பட்டையுடன் சிறு குறிஞ்சான் சம அளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்

புளியம்பழ மருத்துவம்.!

புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.

குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.

அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.

எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது.

எண்டோஸ்கோபி என்றால் என்ன?

எண்டோஸ்கோபி என்பது தொண்டை குழி, உணவுக்குழாய், வயிறு, டியோடினம் எனப்படும் சிறுகுடலின் முன்பகுதியை உள்நோக்கும் பரிசோதனையாகும். இது லென்சின் மூலம் ஒளியினை பயன்படுத்தி எடுக்கப்படும் படத்தை வீடியோ மானிட்டர் மூலம் பார்த்து சிகிச்சை அளிக்க உதவும் கருவியாகும்.

இதன் மூலம் வயிற்றுக்குள்ளிருக்கும் புண், சதை வளர்ச்சி, கட்டிகள், ரத்த கசிவு, குமட்டல், போன்ற பிரச்னைகளின் காரணத்தை கண்டறிய முடியும். குடல் மற்றும் இரைப்பை குழாயில் ஏற்படும் ரத்த கசிவை கண்டறியவும் இப்பரிசோதனை பயன்படுகிறது. இந்த பரிசோதனையின் மூலம் வயிற்றினுள் இருக்கும் பிரச்னைகள் மருத்துவர் மற்றும் நோயாளிகள் வீடியோ மானிட்டர் மூலம் பார்க்க முடியும்.

சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது நோயாளிகளுக்கு குமட்டல் வர வாய்ப்புள்ளதா?

அதற்காக தொண்டை பகுதியில் ஸ்பிரே அல்லது மருந்து அளித்து மரத்துப்போக செய்வதின் மூலம் குமட்டல், வாந்தி வராமல் தடுக்கலாம்.

இக்கருவியின் அளவு பெரிதாக இருக்குமா?

இல்லை, நவீன கருவி தொண்டைக்குள் போகும் அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்கும்.

இக்கருவி பயன்படுத்தும் பொழுது தொண்டை மற்றும் குடல் பகுதியின் பக்கவாட்டில் பாதிப்பு ஏதேனும் ஏற்படாதா?

இக்குருவி மிகவும் சிறியதாக இருக்கும். சிறப்பு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த, திறமை மிக்க மருத்துவரால் இச்சிகிச்சை மேற்கொள்வதால் பாதிப்பு ஏதும் இருக்காது.

இக்கருவியால் வயிற்றினுள் எவ்வளவு ஆழத்திற்கு பார்த்து சிகிச்சை அளிக்க முடியும்?

பல்லில் இருந்து வயிற்றினுள் 100 செ.மீ ஆழம் வரை பார்க்கலாம்.

கொலோனோஸ்கோபி என்றால் என்ன?

கொலோனோஸ்கோபி என்பது ஆசனவாய் வழியாக பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உள்ளிருக்கும் பிரச்னைகளை வீடியோ மானிட்டர் மூலமாக பார்த்து சிகிச்சையளிக்க பயன்படும் கருவியாகும்.

எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் ஏதேனும் உணவு உட்கொள்ளலாமா?

எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் இரவு வயிறை காலியாக வைத்து காலையில் வெறு வயிற்றுடன் வரவேண்டும்.

எண்டோஸ்கோபி மூலம் வேறு எதற்கு சிகிச்சையளிக்க முடியும்?

சிறு குழந்தைகள் சில சமயங்களில் நாணயம், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாயில் வைத்து விளையாடும் பொழுது தொண்டையிலோ அல்லது குடல் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி சிக்கியுள்ள பொருளை எளிதாக எடுக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெரியவர்களும் சில சமயங்களில் உணவு உட்கொள்ளும்போது தொண்டையிலோ அல்லது உணவுக்குழாயில் சிக்கிக்கொள்ள நேரிடும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி மூலமாக எளிதாக சிகிச்சை அளிக்கலாம்.